அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய கொள்கலன்கள் துறைமுகத்தில் தேக்கம்
அத்தியாவசிய உணவுப்பொருட்கள் அடங்கிய சுமார் ஆயிரம் கொள்கலன்கள் கொழும்பு துறைமுகத்தில் தேங்கிக்கிடப்பதாக அமைச்சர் பந்துல குணவர்தன அமைச்சரவைக் கூட்டத்தில் குறிப்பிட்டுள்ளார் என தெற்கு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.
கிழங்கு, பருப்பு, உப்பு, சீனி, நெத்தலி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப்பொருட்கள் இவ்வாறு தேங்கிக் கிடப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க டொலருக்கான பற்றாக்குறையே இவ்வாறு உணவுப்பொருட்கள் துறைமுகத்தில் தேங்கிக் கிடப்பதற்கு காரணம் என தெரிவித்துள்ளார்.
சந்தையில் பொருட்களின் விலை கட்டுப்பாடின்றி அதிகரிப்பதற்கும் அதுவே காரணம் என சுட்டிக்காட்டியுள்ளார்.
டொலருக்கான பற்றாக்குறை பாரிய பிரச்சினைகளை உருவாக்கியுள்ளதாக அமைச்சரவைக் கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள ரிவால்வர் ரீட்டா படத்தின் வசூல் விவரம்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam
900 கடந்த இறப்பு எண்ணிக்கை... இலங்கை உட்பட பெருவெள்ளத்தில் தத்தளிக்கும் மூன்று நாடுகள் News Lankasri