ஜனாதிபதி தேர்தல் தின முறைப்பாடுகளுக்காக விசேட தொலைபேசி இலக்கங்கள்
தேர்தல் காலத்தின் போது இடம்பெறும் சட்ட மீறல்கள் மற்றும் குற்றங்கள் குறித்து முறைப்பாடு செய்வதற்காக சில சிறப்பு தொலைபேசி எண்களை தேர்தல் ஆணையத்தின் தேர்தல் சர்ச்சை தீர்வு பிரிவு அறிமுகப்படுத்தியுள்ளது.
எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுடன் தொடர்புடைய சுதந்திரமான மற்றும் நியாயமான வாக்கெடுப்பை நடத்தும் நோக்கில் இந்த விசேட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தொடர்புக்கான வழிகள்
மேலும், தேர்தல் சட்ட மீறல்கள் மற்றும் வாக்கெடுப்பின் போது சட்ட விரோதமான செயற்பாடுகள் தொடர்பில் தெரிவிப்பதற்கு இந்த தொலைபேசி இலக்கங்கள், வட்ஸப் இலக்கங்கள் மற்றும் மின்னஞ்சல் முகவரி உள்ளிட்டவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இதற்கமைய, இராஜகிரிய பொதுத் தேர்தல் செயலகத்தில் நிறுவப்பட்டுள்ள தேசிய தேர்தல் சர்ச்சைத் தீர்வுப் பிரிவிற்கு குறித்த தொலைபேசி இலக்கங்கள் மூலம் முறைப்பாடு செய்யுமாறு ஆணைக்குழு மக்களிடம் கோரியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |