கோட்டாபயவிடம் துணிவாகச் சொல்ல முதுகெலும்பு இருக்கிறதா? அமைச்சரை கடுமையாக சாடிய அஜந்தா பெரேரா
அரசாங்கம் இன்று முதுகெலும்பு இல்லாமல், துவண்டு போய்விட்டதாக நுகர்வோர் அதிகாரசபை பணிப்பாளர் சபையின் முன்னாள் உறுப்பினர், பேராசிரியர் அஜந்தா பெரேரா குற்றம் சுமத்தியுள்ளார்.
நாட்டின் எரிவாயு தட்டுப்பாட்டுக்கு எதிராக இன்று கொழும்பில் இடம்பெற்ற ஆா்ப்பாட்டத்தின்போதே அவர் இந்தக்கருத்தை வெளியிட்டார்.
நாட்டில் இன்று எரிவாயு தட்டுப்பாட்டு ஏற்பட்டுள்ள போதும், எரிவாயு கொள்கலன்கள் வெடிக்கின்றபோதும் அதற்கு பொறுப்பானவர்கள் தண்டிக்கப்படவில்லை. இதற்கு எரிவாயு நிறுவனம், ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சரின் உறவினர் என்பதால், இதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று அவர் குற்றம் சுமத்தினார்
எரிவாயு வெடிப்புக்கள் ஏற்பட்டு சேதங்கள் ஏற்படும்போது அதற்காக நட்டஈடுகள் வழங்கப்படவேண்டும். எனினும் இதுவரை எதுவும் இடம்பெறவில்லை என்று அஜந்தா பெரேரா குற்றம் சுமத்தினார்.
எனவே அமைச்சர் லசந்த அழகியவண்ண மற்றும் நுகர்வோர் அதிகார சபையின் அதிகாரிகள் பதவி விலகவேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.
ஜனாதிபதியுடன் எரிவாயு நிறுவனம் உறவைக்கொண்டிருந்தாலும், எரிவாயு வெடிப்புக்கள் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்டஈடு வழங்கப்படவேண்டும் என்று ஜனாதிபதியிடம் கூறுவதற்கு அமைச்சர் லசந்த அழகியவன்னவுக்கு முதுகெலும்பு இல்லை என்றும் அஜந்தா பெரேரா குற்றம் சுமத்தினார்.
நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் 225 பேரும் வீடுகளில் உணவு உண்பவர்களாக இருந்தால் அவர்களுக்கு இந்த பிரச்சினையின் பாதிப்பு தெரிந்திருக்கும்.
எனினும் அவர்கள் விருந்தகங்களில் உண்பதால் இந்த பாதிப்பு தெரிந்திருக்கவில்லை.
எனவே சிறைகளில் அடைக்கப்பட்டு, சிறையில் உள்ளவர்கள் திறந்துவிடப்படவேண்டும் என்றும் நுகர்வோர் அதிகாரசபை பணிப்பாளர் சபையின் முன்னாள் உறுப்பினர், பேராசிரியர் அஜந்தா பெரேரா குறிப்பிட்டார்.

தலைநகரில் இருந்து 600,000 மக்களை வெளியேற்றும் நேட்டோ உறுப்பு நாடு... புடினின் அடுத்த இலக்கு News Lankasri

மகாநதி சீரியலில் அடுத்து விஜய்க்கும், வெண்ணிலாவிற்கும் திருமணம் நடக்கப்போகிறதா?.. படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam
