நிர்ணய விலையை மீறும் வர்த்தகர்கள் உடன் கைது செய்யப்படுவார்கள்: அதிகாரசபை எச்சரிக்கை
சீனிக்கு நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்யும் வர்த்தகர்கள் உடன் கைதுசெய்யப்படுவார்கள் என நுகர்வோர் அதிகார சபை எச்சரிக்கை விடுத்துள்ளது.
நாடாளாவிய ரீதியில் இன்று(04.11.2023) முதல் தமது சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.
அவ்வாறு கைது செய்யப்படும் வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நுகர்வோர் அதிகார சபை கூறியுள்ளது.
அதிவிசேட வர்த்தமானி
சீனிக்கான அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயிக்கும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் நேற்று முதல் நடைமுறையாகும் வகையில் நுகர்வோர் விவகார அதிகாரசபையினால் வெளியிடப்பட்டது.
இதன்படி, பொதியிடப்படாத ஒரு கிலோகிராம் வெள்ளை சீனியின் விலை 275 ரூபாவாகவும், பொதி செய்யப்பட்ட ஒரு கிலோகிராம் வெள்ளை சீனியின் விலை 295 ரூபாவாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் பொதி செய்யப்படாத ஒரு கிலோகிராம் சிவப்பு சீனியின் அதிகபட்ச சில்லறை விலை 330 ரூபாவாகும். பொதி செய்யப்பட்ட ஒரு கிலோ கிராம் சிவப்பு சீனியின் விலை 350 ரூபாவாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
நல்லூர் கந்தசுவாமி கோவில் 14 ஆம் நாள் மாலை திருவிழா





உடல் உறையும் நிலையில் லொறிக்குள் சிக்கியிருந்த புலம்பெயர்ந்தோர்... சாரதியால் அம்பலமான கொடூரம் News Lankasri

ஆசிய நாடொன்றிற்கு எலோன் மஸ்க் விடுத்த கடும் எச்சரிக்கை... 1 மில்லியன் மக்களை இழக்கலாம் News Lankasri

ஷார்ஜாவில் தூக்கில் தொங்கி இறந்த கேரள பெண்: இந்தியா திரும்பிய கணவர் விமான நிலையத்தில் கைது News Lankasri

சன் டிவியின் கயல் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் தமிழ் சினிமா முன்னணி நடிகை... யார் தெரியுமா, வீடியோ இதோ Cineulagam
