கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு
திருடனின் கத்திக்குத்தில் கட்டடத் தொழிலாளி ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். கையடக்கத் தொலைபேசியைத் திருடிய இரண்டு சந்தேகநபர்களை துரத்திச் சென்ற கட்டடத் தொழிலாளி ஒருவர், மற்றைய சந்தேகநபர் ஒருவரால் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக கல்கிஸை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மொனராகலை, நமுனுகுல பிரதேசத்தில் வசித்து வந்த 29 வயதான இரண்டு பிள்ளைகளின் தந்தையான கே.எம்.தனுஷ்க ருவன் குமார என்பவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
கட்டடத் தொழிலாளிகள் தங்கும் பகுதிக்குள் நுழைந்த இரண்டு சந்தேகநபர்கள் அங்கிருந்த கையடக்கத் தொலைபேசியைத் திருடிச் சென்றபோது இரு கட்டடத் தொழிலாளர்கள் சந்தேகநபர்களை துரத்திச் சென்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மறைத்து வைத்திருந்த ஆயுதம்
இந்நிலையில், இருவரும் 100 மீற்றர் தூரம் வரை துரத்திச் சென்று இரண்டு சந்தேகநபர்களையும் பிடித்துள்ளனர்.
இதன்போது சந்தேகநபர்களில் ஒருவர் மறைத்து வைத்திருந்த கூரிய கத்தியால் கட்டடத் தொழிலாளி ஒருவரின் மார்பில் கத்தியால் குத்தியுள்ளார் என்று பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் கல்கிஸைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கை வரலாற்றில் முதன்முறையாக உயிர் அச்சுறுத்தல் காரணமாக பதவி விலகியுள்ள நீதிபதி: எம்.ஏ.சுமந்திரன் (Video)





Numerology: இந்த தேதியில் பிறந்தவங்க ஓவர் நைட்டில் கோடீஸ்வரர் ஆவார்களாம்.. உங்க தேதியும் இருக்கா? Manithan

பிரான்ஸ் அழகியை திருமணம் செய்வதற்காக 700 கிலோமீற்றர் பயணித்த நபர்: காத்திருந்த ஏமாற்றம் News Lankasri
