கடவத்த முதல் மீரிகம வரையிலான வீதியின் 40 வீத கட்டுமானப் பணிகள் நிறைவு
மத்திய அதிவேக நெடுஞ்சாலைத் திட்டத்தின் முதற்கட்டமான கடவத்த முதல் மீரிகம வரையிலான வீதியின் கட்டுமானப் பணிகள் தற்போது சுமார் 40 சதவீதம் நிறைவடைந்துள்ளன.
கட்டுமானப் பணிகளை, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க நேற்று (01.01.2026) நேரில் சென்று ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது, குறித்த பிரிவின் கட்டுமானப் பணிகள் தற்போது சுமார் 40 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக அதிகாரிகள் அமைச்சரிடம் விளக்கமளித்தனர்.
கட்டுமானப் பணிகள்
இந்தத் திட்டத்திற்கான ஒப்பந்தங்கள் கடந்த 2015ஆம் ஆண்டிலேயே கையெழுத்திடப்பட்ட போதிலும், கட்டுமானப் பணிகள் 2020ஆம் ஆண்டிலேயே தொடங்கப்பட்டன.
எனினும், இலங்கையில் ஏற்பட்ட கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக இப்பணிகள் இடைநடுவில் நிறுத்தப்பட்டன.
தற்போது புதிய அரசாங்கம் அமைக்கப்பட்டதைத் தொடர்ந்து, போக்குவரத்து அமைச்சுக்கும் சீன அரசாங்கத்திற்கும் இடையே நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளின் பலனாக மீண்டும் கடன் அனுமதிகள் கிடைத்துள்ளன.

அதிவேக நெடுஞ்சாலைத் திட்டம்
இதன் விளைவாக, கடந்த 2025 செப்டெம்பர் 17 அன்று இப்பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டன.
ஆய்வின் போது கருத்து தெரிவித்த அமைச்சர் பிமல் ரத்நாயக்க, இந்த அதிவேக நெடுஞ்சாலைத் திட்டம் நிறைவடைந்த பின்னர், கொழும்பு - கண்டி வீதி மற்றும் அதிவேக நெடுஞ்சாலையின் நுழைவு, வெளியேறும் பகுகளில் ஏற்படக்கூடிய போக்குவரத்து நெரிசல்கள் குறித்து முன்கூட்டியே ஆராய்ந்து உரிய மதிப்பீடுகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
கொழும்புக்கும் மத்திய மாகாணத்திற்கும் இடையிலான போக்குவரத்துத் தொடர்பை மேம்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்படும் இந்த மத்திய அதிவேக நெடுஞ்சாலைத் திட்டம், நாட்டின் மிக முக்கியமான உட்கட்டமைப்புத் திட்டமாகக் கருதப்படுகிறது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
மயில் செய்த வேலையால் மொத்தமாக ஜெயில் அனுப்பப்பட்ட பாண்டியன் குடும்பம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பு புரொமோ Cineulagam
அமெரிக்க பாணியில் பாதுகாப்பு கொள்கைகளை கடைப்பிடிக்க வலியுறுத்தும் கனடாவின் இரும்பு மனிதன் News Lankasri
2025ம் ஆண்டு பிரித்தானியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை: புள்ளிவிவரம் News Lankasri