கடவத்தை - மீரிகம அதிவேக நெடுஞ்சாலையின் கட்டுமானப் பணிகள் விரைவில் மீள ஆரம்பம்

Sri Lanka China
By Aanadhi Jul 07, 2026 11:38 AM GMT
Report

மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் கடவத்தையிலிருந்து மீரிகம வரையிலான பகுதியின் கட்டுமானப் பணிகளை அடுத்த சில வாரங்களுக்குள் மீண்டும் தொடங்கப்படவுள்ளது.

இலங்கை அரசாங்கத்திற்கும் சீனாவிற்கும் இடையில் குறித்த கட்டுமாணப் பணிகள் தொடர்பில் புதிய திருத்தப்பட்ட ஒப்பந்தம் கைச்சாத்திட அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பிரான்ஸ் ஜனாதிபதி தங்கவிருந்த ஹோட்டல் அருகே குண்டு வெடிப்பு! பெரும் பரபரப்பில் சிரியா

பிரான்ஸ் ஜனாதிபதி தங்கவிருந்த ஹோட்டல் அருகே குண்டு வெடிப்பு! பெரும் பரபரப்பில் சிரியா

விசேட திட்டம்

சீன ஏற்றுமதி-இறக்குமதி (எக்சிம்) வங்கியின் நிதிப் பங்களிப்புடன் செயல்படுத்தப்படும் இந்த விசேட திட்டத்தின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து இரு தரப்பினரும் தற்போது இறுதி இணக்கப்பாட்டிற்கு வந்துள்ளனர்.

திட்டத்தின் நிதி மற்றும் அமைப்புசார் விடயங்களை மீளாய்வு செய்வதற்காக, சீன எக்சிம் வங்கியின் உப தலைவர் யாங் டோங்னிங் தலைமையில் உயர்மட்ட தூதுக்குழுவொன்று அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்தது.

கடவத்தை - மீரிகம அதிவேக நெடுஞ்சாலையின் கட்டுமானப் பணிகள் விரைவில் மீள ஆரம்பம் | Construction Work Kadawatha Mirigama Expressway

நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ மற்றும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் உள்ளிட்ட நாட்டின் முக்கிய அரச அதிகாரிகளைச் சந்தித்து அவர்கள் விரிவான கலந்துரையாடல்களை நடத்தியுள்ளனர்.

இதன்போது, திருத்தப்பட்ட நிதி ஒப்பந்தத்தில் உள்ள புதிய வழிமுறைகளை நடைமுறைப்படுத்துவது குறித்து முக்கியமாக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

கிராம மக்கள் ஒன்றுதிரண்டு மீண்டும் விகாரைக்கு அழைத்து வரப்பட்ட ராஜாங்கனை சத்தாரதன தேரர்

கிராம மக்கள் ஒன்றுதிரண்டு மீண்டும் விகாரைக்கு அழைத்து வரப்பட்ட ராஜாங்கனை சத்தாரதன தேரர்

அபராதக் கட்டணங்கள் 

பல ஆண்டுகளாக திட்டம் தாமதமானதால் ஏற்பட்ட அபராதக் கட்டணங்கள் மற்றும் காலப்போக்கில் ரூபாயின் பெறுமதி வீழ்ச்சியடைந்ததால் மொத்த செலவு அதிகரித்தமை குறித்தும் இந்த இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இந்த மேலதிக செலவுகள் மற்றும் அபராதங்கள் நாட்டிற்கு சுமையாக அமையாத வகையில், சலுகை நிபந்தனைகள் மற்றும் நெகிழ்வான திருப்பிச் செலுத்தும் அடிப்படையில் ஏற்பாடு செய்வதற்காக தற்போதைய பேச்சுவார்த்தைகள் மிகவும் வெற்றிகரமாக முடிவடைந்துள்ளதாக அரசாங்க்தின் முக்கியஸ்தர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

கடவத்தை - மீரிகம அதிவேக நெடுஞ்சாலையின் கட்டுமானப் பணிகள் விரைவில் மீள ஆரம்பம் | Construction Work Kadawatha Mirigama Expressway

எக்சிம் வங்கி அதிகாரிகளுடன் குறித்த பேச்சுவார்த்தைகள் சாதகமான மட்டத்தில் மேற்கொள்ளப்பட்டமை காரணமாக, இந்த மாத இறுதிக்குள் மற்றொரு சீன தூதுக்குழு இலங்கைக்கு வரவுள்ளது. இந்த வாரம் இரு தரப்பினரும் கலந்துரையாடி இறுதி முடிவெடுத்த, புதிய திருப்பிச் செலுத்தும் வழிமுறைகள் அடங்கிய உத்தியோகபூர்வ திருத்தப்பட்ட ஒப்பந்தத்துடன் அவர்கள் நாட்டிற்கு வருவார்கள்.

அதன் பின்னர் கட்டுமானப் பணிகள் உத்தியோகபூர்வமாக விரைவாக ஆரம்பிக்கப்படும்.

விரைவில் மீள ஆரம்பம்

சீன எக்சிம் வங்கியின் 500 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி ஒதுக்கீடு மற்றும் இலங்கை அரசாங்கத்தால் வழங்கப்படும் 438 மில்லியன் அமெரிக்க டொலர் நிதிப் பங்களிப்புடன் மீண்டும் தொடங்கப்படும் இந்த பாரிய திட்டம், 2028 செப்டம்பர் மாதத்திற்குள் முழுமையாக நிறைவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கடவத்தை - மீரிகம அதிவேக நெடுஞ்சாலையின் கட்டுமானப் பணிகள் விரைவில் மீள ஆரம்பம் | Construction Work Kadawatha Mirigama Expressway

இதற்கு முன்னரும் இங்கு கட்டுமானப் பணிகளை மேற்கொண்ட சீன மெட்டலர்ஜிகல் கோர்ப்பரேஷன் நிறுவனம் இங்கு பிரதான ஒப்பந்தக்காரராக தொடர்ந்து செயற்படவுள்ளது.

மத்திய அதிவேக நெடுஞ்சாலை அமைப்பின் 37 கிலோமீட்டர் தூர கடவத்தை-மீரிகம பகுதியின் அனைத்து வேலைகளும் 2022 ஆம் ஆண்டு முதல் இன்று வரை முழுமையாக இடைநிறுத்தப்பட்டிருந்தன. தற்போது இதன் மொத்த கட்டுமானப் பணிகள் 51 சதவீத மட்டத்தில் உள்ளன.

பணிகள் ஆரம்பித்த பின்னர், எதிர்வரும் 2026 ஆம் ஆண்டு இறுதிக்குள் அதனை 65 சதவீதமாக அதிகரிக்கவும், 2027 ஆம் ஆண்டு முடிவடையும் போது திட்டத்தின் 90 முதல் 95 சதவீதம் வரையான பகுதிகளை நிறைவு செய்யவும், எஞ்சிய சிறிய பகுதியை 2028 ஆம் ஆண்டில் நிறைவு செய்யவும் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.  

முடிவுக்கு வந்தது ஒரு சகாப்தம்..! உலகக்கோப்பையிலிருந்து கண்ணீருடன் விடைபெற்றார் ரொனால்டோ

முடிவுக்கு வந்தது ஒரு சகாப்தம்..! உலகக்கோப்பையிலிருந்து கண்ணீருடன் விடைபெற்றார் ரொனால்டோ

நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 6 Evening

மரண அறிவித்தல்

Columbuthurai, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, London, United Kingdom

24 Aug, 2016
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, பிரான்ஸ், France

17 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், Markham, Canada

20 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, பேர்ண், Switzerland

23 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, High Wycombe, United Kingdom

14 Aug, 2026
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Ajax, Canada

03 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom, அவுஸ்திரேலியா, Australia

23 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரந்தன், சாவகச்சேரி, Scarborough, Canada

23 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பூநகரி, துணுக்காய்

24 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், சுண்டிக்குளி, Toronto, Canada, New Jersey, United States

17 Aug, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கன்னாதிட்டி, Brampton, Canada

20 Aug, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US