காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையின் நிர்மாண பணிகள் அடுத்த வருடம் ஆரம்பம் - காமினி ஏக்கநாயக்க
2022ம் ஆண்டின் ஆரம்பத்தில் புதிய காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை நிர்மாணப்பணிகள் ஆரம்பமாகவுள்ளதாக இலங்கை சீமெந்து கூட்டுத்தாபனத்தின் தலைவர் காமினி ஏக்கநாயக்க (Gamini Ekanayake) தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையின் 725 ஏக்கர் நிலத்தை அங்கீகரிக்கவும், இராணுவத்தினர் ஆக்கிரமித்துள்ள 185 ஏக்கர் நிலத்திலிருந்து அவர்கள் விலகிச் செல்ல அழைப்பு விடுத்தும் தாக்கல் செய்யப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை ஏற்கனவே ஒப்புதல் வழங்கியுள்ளது.
இந்த ஆண்டு பெப்ரவரி 8ம் திகதி அமைச்சரவை பத்திரத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்ட பிறகு, 100க்கும் பழைய இயந்திரங்களை அகற்றும் பணிகள் ஆரம்பித்துள்ளன. அதிகாரப்பூர்வமாக அந்த இடத்திலிருந்து விலகிச் செல்லுமாறு இராணுவத்திடம் கூறவில்லை.
என்றாலும், 2022 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் வளாகத்தில் புதிய கே.கே.எஸ் சீமெந்து
தொழிற்சாலை கட்டப்படும் போது அவர்கள் அங்கிருந்து வெளியேறுவார்கள் என்று இலங்கை
சீமெந்து கூட்டுத்தாபனத்தின் தலைவர் காமினி ஏக்கநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
உரிமைகளுக்காக மீண்டும் மீண்டும் போராடும் ஈழத்தமிழர்களின் நிலை.. 11 மணி நேரம் முன்
சரிகமப சீசன் 5 புகழ் பவித்ராவுக்கு அடித்த லக்... யாருடைய இசையமைப்பில் பாடுகிறார் தெரியுமா? Cineulagam
ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பப்பட்ட கம்ருதீன், மகாநதி சீரியலில் இருந்து நீக்கம்? அதிர்ச்சி தகவல் Cineulagam
முத்துவேல், சக்திவேல் உதவியால் சிறையிலிருந்து வெளிவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்.. புரோமோ இதோ Cineulagam