இரட்டை மேம்பாலங்களின் முதலாம் கட்டடப்பணிகள் திட்டமிடப்பட்ட காலத்திற்குள் நிறைவு செய்யப்படும்: ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ (Photos)
கொழும்பை அண்டிய பகுதிகளில் காணப்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் நிர்மாணிக்கப்படவுள்ள நீதிபதி அக்பர் மாவத்தை மற்றும் உத்தரானந்த மாவத்தையில் நிர்மாணிக்கப்படும் இரட்டை மேம்பாலங்களின் முதலாம் கட்டடப் பணிகள் திட்டமிடப்பட்ட காலத்திற்குள் நிறைவு செய்யப்படும் என ஆளும் தரப்பு பிரதம கொறடா, நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இரட்டை மேம்பாலங்களின் மேற்பகுதியின் பணியை நிறைவு செய்வதற்குத் தேவையான கான்கிரீட் கட்டமைப்புகளை எடுத்துச் செல்லும் பணி இன்று முதல் ஆரம்பிக்கப்படுவதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்த இரட்டை மேம்பாலப் பணிகளை இவ்வருடம் ஜூன் மாதம் நிறைவு செய்வதற்காக 24 மணித்தியாலங்களும் உழைக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும், பிரதமர் மகிந்த ராஜபக்சவும் பணிப்புரை விடுத்துள்ளனர்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் சுபீட்சத்தின் நோக்கின் பிரகாரம், அபிவிருத்திக்கான பாதையில் நிலையான நாட்டை முன்னேற்றுவதற்கு நிலையான வீதி வசதிகளை மக்களுக்கு வழங்குவது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.
எனவே, துரித அபிவிருத்தித் திட்டமாகக் கொழும்பு புறநகர் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக நிர்மாணிக்கப்பட்டு வரும் இரட்டை மேம்பாலத்தின் முதலாவது கட்டமான நீதிபதி அக்பர் மாவத்தை மற்றும் உத்தரானந்த மாவத்தையின் நிர்மாணப் பணிகள் திட்டமிட்ட திகதியில் நிறைவு செய்யப்படும்.
நீதிபதி அக்பர் மாவத்தையில் உள்ள மேம்பாலம் 207 மீட்டர் நீளமும் 8.4 மீட்டர் அகலமும் கொண்டது.
உத்தரானந்த மாவத்தையில் உள்ள மேம்பாலம் 396 மீட்டர் நீளம் கொண்டது. இதன் அகலம் 10.4 மீட்டர்களாகும்.
இரண்டு மேம்பாலங்களையும் இணைக்கும்
வகையில் அமைக்கப்படும் மேம்பாலத்தின் நீளம் 310 மீட்டர்களாகும். இதன் அகலம்
6.9 மீட்டர். இதற்கு 5270 மில்லியன் ரூபா செலவிடப்படும் என சுட்டிக்காட்டியுள்ளார்.





கறுப்பு ஜூலை 1983ஆம் ஆண்டின் ஆறாவடுவும் தீராத தமிழர் பிரச்சினையும் 6 மணி நேரம் முன்
ஹார்முஸ் முடக்கத்தால் தத்தளிக்கும் ஆசிய நாடுகள்... சத்தமின்றி கனடா பக்கம் திரும்பிய ஜப்பான் News Lankasri