யாழில் நவீன பொது மலசலகூட தொகுதி நிர்மாணிப்பு: துறைசார் தரப்பினருக்கு டக்ளஸ் பணிப்பு
யாழ். (Jaffna) நகர்ப்பகுதியில் நவீன வசதிகளுடன் கூடிய பொது மலசலகூட தொகுதி ஒன்றை நிர்மாணிக்கும் திட்டத்தை நடைமுறைபடுத்த நடவடிக்கை எடுக்குமாறு துறைசார் அதிகாரிகளுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா (Douglas Devananda) பணிப்புரை விடுத்துள்ளார்.
இது தொடர்பிலான விசேட கலந்துரையாடலானது, இன்று (15.06.2024) இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம் மற்றும் நகர்ப் பகுதிகளுக்கு வரும் பெரும் எண்ணிக்கையிலான மக்களின் அவசர, அவசிய தேவை கருதி நகர்ப்பகுதியில் நவீன வசதிகளை கொண்ட பொது மலசலகூடம் ஒன்றை அமைப்பதற்கான திட்டம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் முன்வைக்கப்பட்டது.
திட்டவரைபுகள்
இந்த திட்டத்திற்கு அமையவே இன்றையதினம் குறித்த திட்டவரைபுகளை இறுதி செய்யும் கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது, திட்டவரைபுகள் இறுதி செய்யப்பட்டதுடன் திட்டத்தை துரிதமாக முன்னெடுக்குமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, துறைசார் அதிகாரிகளுக்கு பணித்துள்ளார்.
மேலும், நகர அபிவிருத்தி அதிகார சபையின் பங்களிப்புடன் முன்னெடுக்கப்படவுள்ள குறித்த திட்டமானது அமைச்சரின் திட்டமிடல்களை அடுத்து விரைவில் நிர்மாணிக்கப்படவுள்ளது.
அதேவேளை, இக்கலந்துரையாடலில் யாழ் மாநகர ஆணையாளர் , பொறியியலாளர்கள் அபிவிருத்தி அதிகார சபை மற்றும் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றிருந்தனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |