யாழ்ப்பாணத்தில் உருவாகும் சர்வதேச கிரிக்கெட் மைதானம் குறித்து வெளியான தகவல்
யாழ்ப்பாணத்தில் உருவாகும் சர்வதேச கிரிக்கட் மைதானம் தொடர்பில் அரசாங்கம் தகவல் வெளியிட்டுள்ளது.
யாழ்ப்பாணம் மண்டைதீவு பகுதியில் இந்த மைதானம் நிர்மானிக்கப்பட உள்ளதாகவும் எதிர்வரும் வாரங்களில் இந்த நிர்மானப் பணிகள் முன்னெடுக்கப்பட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே இந்த தகவலை இன்று வெளியிட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்திற்கு இன்றயை தினம் கண்காணிப்பு விஜயமொன்றை அமைச்சர் மேற்கொண்டிருந்தார்.
இந்த விஜயத்தில் ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் இணைந்து கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சுற்றாடல் குறித்த சில அறிக்கைகளை பெற்றுக்கொள்ள முடியாத காரணத்தினால் மைதானத்தின் நிர்மானப் பணிகள் கால தாமதமானது என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் நிர்மானப் பணிகளை பூா்த்தி செய்ய எதிர்பார்ப்பதாக அமைச்சர் சுனில் குமார கமகே மேலும் தெரிவித்துள்ளார்.