மத்திய வங்கி மோசடியை விட பெரிய மோசடி இடம்பெறக்கூடிய வீதி நிர்மாணப்பணி குறித்து எச்சரிக்கை
இலங்கை மத்திய வங்கியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பாரிய நிதி மோசடியை விடவும் இரட்டிப்பு மடங்கு நிதி மோசடி இடம்பெறக்கூடிய வீதி நிர்மாணப்பணி திட்டம் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் கலகெதர முதல் ரம்புக்கன வரையிலான 20 கிலோமீற்றர் வீதி நிர்மாணிக்கப்பட்டால் அதன் ஊடாக 16440 கோடி ரூபா பண மோசடி இடம்பெறும் என ஊழல் எதிர்ப்புக் குரல் அமைப்பின் அழைப்பாளர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
இந்த 20 கிலோமீற்றர் வீதியை நிர்மாணித்தால் தாமரை கோபுரம் மற்றும் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை நிர்மாணிக்க செலவான அளவு பணம் செலவாகும் எனத் தெரிவித்துள்ளார்.
இந்த வீதியை நிர்மாணிப்பதற்குச் சீன நிறுவனமொன்று 1050 மில்லியன் டொலர் தேவை எனக் கோரியிருந்த போதிலும் உள்நாட்டு நிறுவனமொன்று அதற்கான செலவாக 1872 மில்லியன் டொலர் தேவைப்படும் என குறிப்பிட்டுள்ளது.
எனினும் சீன நிறுவனத்திற்கு இந்த சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை எனவும், உள்நாட்டு நிறுவனத்திற்கு சந்தர்ப்பம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வாறு கூடுதல் தொகைக்கு வீதி நிர்மாணிக்க அனுமதி வழங்குவதனால் சுமார் 16440 கோடி ரூபா நட்டம் ஏற்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு நிறுவனத்திற்கு இந்த வாய்ப்பை பெற்றுக் கொள்ளும் நோக்கில் பெருந்தெருக்கள் அமைச்சு, அமைச்சரவையைப் பிழையாக வழிநடத்தியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.





தமிழ் இன அழிப்பை கட்டமைத்துள்ள இலங்கை அரசாங்கம் 11 மணி நேரம் முன்

இந்தியாவை 100 ஆண்டுகளுக்கு மேல் ஆண்ட கிழக்கிந்திய கம்பெனி - இப்போது உரிமையாளரான இந்தியர் News Lankasri

சிவன் ஆலயத்திற்காக மோதும் நாடுகள்! மூன்றாம் உலகப்போரின் தொடக்கமா? ஓடித்திரியும் ட்ரம்ப் News Lankasri
