சீக்கிய தலைவரை கொலை செய்ய திட்டம்: இந்தியாவுக்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கை
அமெரிக்காவில் சீக்கிய தலைவரை இந்தியா கொலை செய்ய திட்டமிட்டு வருவதாக அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது.
கனடாவில் சீக்கிய தலைவர் ஹர்தீப் சிங் நிஜார் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் இந்தியா - கனடா இடையிலான விரிசலை தோற்றுவித்திருந்தது.
இதையடுத்து இந்த கொலை வழக்கில் இந்திய அரசுக்கு தொடர்பு இருப்பதாக கனடா நேரடி குற்றச்சாட்டை முன்வைத்தது.
அமெரிக்கா கடுமையான எச்சரிக்கை
இந்நிலையில் குறித்த குற்றச்சாட்டை இந்தியா மறுத்ததுடன், இதனால் உருவான சர்ச்சையின் விளைவாக இருநாடுகளும் தங்களது தூதரக அதிகாரிகளை திரும்ப பெற்றுக் கொண்டனர்.

இந்நிலையில் அமெரிக்க மண்ணில் வைத்து சீக்கிய தலைவர் குர்பத்வாண்ட் சிங்கை கொலை செய்ய இந்தியா திட்டமிட்டு வருவதாக அமெரிக்கா தகவல் வெளியிட்டுள்ளது.
மேலும் இதற்கான திட்டம் தீட்டப்படுவதாகவும் குறிப்பிட்டு இந்தியாவுக்கு அமெரிக்கா கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஜேர்மனியில் புலம்பெயர்ந்தோரால் ரயில் முன் தள்ளிவிடப்பட்ட இளம்பெண்: விவரங்கள் வெளியாகின News Lankasri
சிறகடிக்க ஆசை சீரியலில் உயிரிழந்த முக்கிய நபர், கதறி கதறி அழும் மீனா... பெரும் ஷாக்கில் முத்து Cineulagam
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் நியூ என்ட்ரியால் ஜனனிக்கு ஏற்படப்போவது?... வெளிவந்த புரொமோ Cineulagam