பிரித்தானிய மகாராணியை கொலை செய்ய இரண்டு வருடங்களுக்கு முன்பு தீட்டப்பட்ட சதித்திட்டம்?
பிரித்தானிய மகாராணியை கொல்லும் எண்ணத்தில் ஆயுதத்துடன் விண்ட்ஸர் கோட்டைக்குள் இளைஞரொருவர் நுழைய முயன்ற சம்பவம் பெரும் பரப்பரப்பினை ஏற்படுத்தியிருந்தது.
ஜாலியன் வாலாபாக் படுகொலை நிகழ்ந்து 102 ஆண்டுகள் கழிந்த நிலையில், இந்த படுகொலைக்கு பழிக்குப்பழியாக பிரித்தானிய ராணி 2-ம் எலிசபெத்தை கொலை செய்யப்போவதாக குறித்த இளைஞர் வெளியிட்ட காணொளியினால் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியிருந்தது.
பிரித்தானிய மகாராணியாருக்கு கொலை மிரட்டல் விடுத்த Jaswant Singh Chail எனும் (19) வயதுடைய இளைஞன் இரண்டு வருடங்களுக்கும் மேலாகவே ராஜ குடும்பத்தினர் மீது வெறுப்பு கொண்டிருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், எழுத்தாளரான Saurav Dutt என்பவர், இரண்டு வருடங்களுக்கு முன்பு Jaswant Singh தனக்கு அனுப்பிய மின்னஞ்சல் ஒன்றில், ராஜ குடும்பத்தினர் மீதான வெறுப்பை வெளிப்படுத்தியதாக தெரிவித்துள்ளார்.
குறித்த மின்னஞ்சலில், மகாராணியாரின் கணவரான இளவரசர் பிலிப், இந்தியாவில் அப்பாவிகளை கொலை செய்ய உத்தரவிட்ட ஜெனரல் டயரின் மகனுடன் ஒன்றாக கடற்படையில் பணி செய்ததால், அவருக்கும் இந்த சம்பவத்தில் பொறுப்பு இருக்கிறது என்றும், அதனால் ஜாலியன்வாலாபாகில் நடந்த கொலைகளுக்காக அவர் உட்பட ராஜ குடும்பத்தினர் மன்னிப்புக் கேட்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், கைது செய்யப்பட்டுள்ள Jaswant Singh மீது மன நல சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மரண வீட்டில் அரசியல்.. 2 நாட்கள் முன்
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் பழனியாக நடிக்கும் ராஜ்குமாரின் மனைவி, குழந்தைகளை பார்த்துள்ளீர்களா?... இதோ Cineulagam
ஜனனி சொன்ன விஷயம், குணசேகரனுக்கு எதிராக விசாலாட்சி இதை செய்வாரா?... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam