கோட்டாபய , மைத்திரியை படுகொலை செய்ய சதி - வெளியான தகவல் : செய்திகளின் தொகுப்பு
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ(Gotabaya Rajapaksa) மற்றும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன (Maithripala Sirisena) ஆகியோரை படுகொலை செய்ய சதித்திட்டம் தீட்டப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் அரசாங்கம் உடனடியாக விசாரணைகளை ஆரம்பிக்க வேண்டுமென ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார(Palitha Range Bandara) தெரிவித்துள்ளார்.
இவர்களை கொல்ல சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர அண்மையில் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.
சதிச் செயலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் இருவருமே அன்றும் இன்றும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட அரச தலைவர்களாக இருப்பதால் விசாரணைகளுக்கு எந்தத் தடையும் இல்லை என்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான செய்திகளின் தொகுப்பு,
வெனிசுலாவைத் தொடர்ந்து... நாடொன்றின் மீது திடீர் இராணுவ நடவடிக்கைக்குத் தயாராகும் ட்ரம்ப் News Lankasri
ஈரானுக்கு எதிராக அதிநவீன லேசர் தொழில்நுட்பம்: மாற்று திட்டத்தை கையில் எடுத்த அமெரிக்கா News Lankasri