நாடாளுமன்ற உறுப்பினர்களை வீட்டுக்கு அனுப்ப இரகசிய கலந்துரையாடல்: அநுர குற்றச்சாட்டு
நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெரும்பகுதியினரை வீட்டுக்கு அனுப்பிவைக்க வேண்டுமென்ற பாரிய உரையாடலொன்று தற்போது நாட்டில் நிலவிவருவதாக தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,
இப்போது இருக்கின்றவர்களில் மூன்றில் 2 பங்கினர் அடுத்த நாடாளுமன்றத்தில் இல்லையென்பது எமக்குத் தெரியும்.
தேசிய மக்கள் சக்தி
அதன்பின்னர் தேசிய மக்கள் சக்தியின் பெரும்பாலான உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திற்கு வருவார்கள்.
அதில் 25 பேரை உச்ச அளவினராகக்கொண்ட அமைச்சரவையொன்றை நாங்கள் நியமிப்போம்.
ஒக்டோபர் மாதம் முதலாந் திகதியே அடுத்த அமர்வு நடைபெறும்.
25 பேரைக்கொண்ட அமைச்சரவை
25 பேரைக்கொண்ட அமைச்சரவைக்கு அறிவியல்ரீதியாக விடயத்துறைகள் பகிரப்படும்.
இதுவரை காலமும் அமைச்சுக்கள் பகிர்ந்தளிக்கப்பட்டது நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக அல்ல.
தமக்கிடையே பகிர்ந்து கொண்டார்கள். நாங்கள் அந்தந்த விடயத்துறைகளுக்கு பொருந்தக்கூடிய ஒருங்கிணைப்புகளைச் செய்து அமைச்சுக்களை பிரித்தொதுக்குவோம்” என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

சூப்பர் சிங்கரில் ஏ.ஆர்.ரகுமான் ஹிட்ஸ் ரவுண்டில் சில போட்டியாளர்களுக்கு சர்ப்ரைஸ்.. என்ன தெரியுமா? Cineulagam

மனைவியும் மாமியாரும் தினமும் துஷ்பிரயோகம் செய்வதாக அதிர்ச்சி புகார்! ரகசிய கமெரா மூலம் அம்பலமான கொடுமை News Lankasri

விரைவில் ஒளிபரப்பாக போகும் நடிகை குஷ்பு நடிக்கும் புதிய சீரியல்... எந்த டிவி, நேரம் முழு விவரம் Cineulagam

ட்ரம்புக்கு பதிலடி... 8,000 அமெரிக்க தயாரிப்புகள் மீது வரி விதிக்க பிரித்தானியா முடிவு News Lankasri

மனோஜ் கிட்ட கொஞ்சம் மனசு விட்டு பேசிருக்கலாமோனு உறுத்துது: சித்தப்பா Jayaraj Emotional Interview Cineulagam
