அரிசி இறக்குமதி குறித்து வெளியான தகவல்
அரிசியை இறக்குமதி செய்வது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாக வர்த்தக, வணிக, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
வர்த்தக, வணிக, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் நாடாளுமன்ற ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, சந்தையிலுள்ள சம்பா மற்றும் கீரி சம்பா அரிசிகளுக்குப் மாற்றீடாகக் கடந்த ஏப்ரல் மாதத்தில் மாத்திரம் 120,000 மெட்ரிக் டொன் அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
அரிசி இறக்குமதி
தேவையேற்பட்டால் மாத்திரமே அரிசி இறக்குமதி செய்வது குறித்து ஆராயப்படுமெனவும் தெரிவித்தார்.

நெல்லை உலர்த்துதல், களஞ்சியப்படுத்துதல் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காகக் கூட்டுறவு மொத்த விற்பனைக் கூட்டுத்தாபனம் ஊடாக 1,000 மில்லியன் ரூபா (ரூபா 1 பில்லியன்) நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.