சீன உரத்தை மூன்றாம் தரப்பினர் பரிசோதிக்க இலங்கை அரசு இணக்கம்
பாதகமான நுண்ணுயிர்கள் அடங்கியுள்ளமை இரு தடவைகள் உறுதிப்படுத்தப்பட்ட சீன உரத்தை மூன்றாம் தரப்பொன்றினால் மீண்டும் பரிசோதிப்பதற்கு இலங்கை இணக்கம் தெரிவித்துள்ளது.
இலங்கைக்கான சீனத் தூதரகம் இதனை தெரிவித்துள்ளது.
இதேவேளை,மாசுப்பட்ட சேதனப்பசளைகளுடன் இலங்கைக்கு கப்பலை அனுப்பியுள்ள, சீனாவின் சேதனப்பசளை உற்பத்தியாளர் நிறுவனமான கியுன்டோ பயோடெக் குருப் கொம்பனி லிமிடெட்( Qingdao Biotech Group Co. Ltd) தம்முடன் செய்துக்கொள்ளப்பட்ட அசல் கேள்விப்பத்திர உடன்படிக்கையில், ஏற்றுக்கொள்ளப்பட்ட விலையில் 70 சதவிகிதம் மற்றும் பசளைக்கான கட்டணத்தைச் செலுத்த வேண்டும் என்று இலங்கையின் விவசாய அமைச்சகத்திற்கு நிபந்தனைகளை முன்வைத்துள்ளது.
குறித்த நிறுவனத்தின் சேதனப்பசளைகள் அடங்கிய சா்ச்சைக்குரிய கப்பலை, சீனாவுக்கு திருப்பியழைக்கவேண்டும் என்று இலங்கையின் அரசாங்கம் கோரி வருவதை அடுத்தே இந்த நிபந்தனைகளை சீன நிறுவனம் விதித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.