தொடர்ச்சியாக இடம்பெறும் சுற்றிவளைப்பு வர்த்தகர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை (Video)
மட்டக்களப்பு - ஓட்டமாவடி மற்றும் வாழைச்சேனை பிரதேசங்களில் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினரால் இன்று அரிசி ஆலைகளில் சுற்றிவளைப்போன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபைக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளுக்கு அமைய இப் பகுதிகளிலுள்ள வியாபார நிலையங்களில் பரிசோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பதுக்கிய பொருட்கள் மீட்பு
சோதனை நடவடிக்கையானது மட்டக்களப்பு பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் உதவிப் பணிப்பாளர் ஆர்.எப்.அன்வர் சதாத் தலைமையில் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் உத்தியோகத்தர்கள் சகிதம் இடம்பெற்றுள்ளது.
பதுக்கிய பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக மட்டக்களப்பு மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் உதவிப்பணிப்பாளர் ஆர்.எப்.அன்வர் சதாத் அவர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அரிசியை கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்த விற்பனை நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதுடன், குறித்த விற்பனை நிலையங்களில் கட்டுப்பாட்டு விலைக்கு அரிசியை விற்பனை செய்வதற்கான நடவடிக்கையினையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அத்தோடு இயந்திர பொருட்கள் விற்பனை செய்யும் கடையொன்றில் விலையினை அழித்து விற்பனை செய்தமை தொடர்பில் உடமைகள் பறிமுதல் செய்யப்பட்டதுடன், விற்பனை நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளபட்டுள்ளது.
அத்துடன் சில்லறை வியாபார நிலையமொன்றில் பழைய விலையில் பதுக்கி வைக்கப்பட்ட பால்மாக்கள் பறிமுதல் செய்யப்பட்டு, பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
மட்டக்களப்பில் தொடர்ச்சியாக வியாபார நிலையங்களில் கண்காணிப்பு நடவடிக்கைகள் நடைபெறுவதுடன், அரிசியை கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்வதையும், பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்பவர்களையும் பிடித்து சட்ட நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக மட்டக்களப்பு மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் உதவிப்பணிப்பாளர் ஆர்.எப்.அன்வர் சதாத் தெரிவித்துள்ளார்.
கள்ள சந்தையில் தண்ணீராக மாறிய எரிபொருள் |

பாகிஸ்தான் ராணுவ தளங்களை தாக்கிய இந்திய விமானப்படை: BrahMos பயன்படுத்தப்பட்டிருக்க வாய்ப்பு News Lankasri

தித்திப்பான சர்க்கரைப் பொங்கல் ரெசிபி- சர்க்கரை நோயாளருக்கு பாதிப்பு இல்லாமல் செய்வது எப்படி? Manithan
