அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பேரணியில் பொலிஸார் குழப்பம்! பதாகைகள் பறிப்பு
அம்பாறை மாவட்டத்தின் திருக்கோவில் பிரதேசத்தில் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி ஏற்பாடு செய்யப்பட்ட பேரணியை கொவிட் 19 தொற்றைக் காரணமாகக் கொண்டு பிரதேச செயலக வளாகத்திற்கு வருகை தந்த பொலிஸ் மற்றும் புலனாய்வு பிரிவினர் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
இதனை தொடர்ந்து ஊடகங்களுக்கு அரசியல் பிரமுகர்களும் , பொது அமைப்பைச் சார்ந்தவர்களும் கருத்து தெரிவிப்பதைப் பதிவுசெய்ய வேண்டாம் எனக் கூறியதோடு பதாகைகளைக் கைப்பற்றிச் சென்றுள்ளனர்.
இதன் பின்னர் ஊடக சந்திப்பில் கருத்து கூறிய இலங்கை தமிழரசு கட்சியின் வாலிப முன்னணியின் துணைச்செயலாளர் அ. நிதான்சன் சிறைகளில் தற்போது கொவிட் தொற்று வேகமாகப் பரவுவதன் காரணமாகத் தமிழ் அரசியல் கைதிகளின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு குறித்து அவர்களின் குடும்பத்தினர் வேதனையடைகின்றனர்.
அது மாத்திரமல்லாது தமிழ் அரசியல் கைதிகள் பலர் வைரஸ் தாக்கத்திற்கும் உள்ளாகியுள்ளனர்.
மிருசுவில் படுகொலையாளி சுனில் ரத்னாயக்க போன்றோரை பொது மன்னிப்பு அடிப்படையில் விடுதலை செய்ய முடியுமென்றால் ஏன் தமிழ் அரசியல் கைதிகளின் நிலையையறிந்து உடனே விடுதலை செய்ய முடியாது எனக் கேள்வியெழுப்பியுள்ளார்.
திருக்கோவில் பிரதேச செயலகத்தில் பொலிஸார் குவிக்கப்பட்டு எங்களுக்குப் பலதடைகளை ஏற்படுத்தினர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
திருக்கோவில் பிரதேச சபையின் தவிசாளர் ஆர் .டபிள்யூ .கமலராஜன் கருத்து தெரிவிக்கையில்,
வடக்கு, கிழக்குப் பகுதிகளில் கைது செய்யப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரி ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டு செல்லும் முகமாகத் திருக்கோவில் பிரதேச செயலாளரிடம் மகஜரினை கையளித்திருந்தோம்.
அம்பாறை மாவட்ட மக்களின் ஒருமித்த குரலாகப் பல ஆண்டுகளாகச் சிறைவாசம் அனுபவித்துவரும் கைதிகள் தொற்று நோய்க்கு ஆளாகாத வண்ணம் கைதிகளை புதிய ஆண்டில் நல்லதொரு செய்தியாக விடுதலை செய்யுங்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்.
அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத் தலைவி தம்பிராசா செல்வராணி குறிப்பிடுகையில்,
இலங்கை அரசினால் கைது செய்யப்பட்டு அடுத்து வைக்கப்பட்ட அனைத்து அரசியல் கைதிகளும் கொவிட் தொற்றின் காரணமாக வருத்திக் கொண்டிருப்பது மன வேதனையைத் தருகின்றது.
இவர்களை இலங்கை அரசு உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.
உலகநாடுகள் அரசியல் கைதிகள் விடையத்தில் கவனம் செலுத்தி விடுதலை செய்யக் கோருகின்றோம்.
ஐக்கிய நாடுகளின் உலகசாசனத்தின் படி எந்த ஒரு அரசியல் கைதிகளையும் குற்றமின்றி விசாரணையின்றி தடுத்து வைப்பது குற்றமாகும்.
இது மனித உரிமை மீறலாகவே பார்க்கப்படுகிறது. இச் சாசனத்தில் இலங்கை அரசும் கைச்சாத்திட்டுள்ளது.
விசாரணை இன்றி தடுத்து வைப்பது குற்றம் என வடக்கு, கிழக்கு தமிழ் உறவுகள் சார்பாக வலியுறுத்துகின்றேன் எனக் கருத்தினை முன்வைத்துள்ளார்.







நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிக்க வைத்த உக்ரைனியர்: ஜேர்மனி எடுத்துள்ள அதிரடி முடிவு News Lankasri
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam