நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமாரிற்கு அமெரிக்காவிலிருந்து கிடைத்த ஆதரவு
நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் விடுதலை செய்யப்பட்டதை வரவேற்கும் அதேவேளை அவரது கைது குறித்து நான் ஆழ்ந்த கவலையடைகிறேன் என அமெரிக்க ஜனநாயக கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமர் லீ (Summer Lee) தெரிவித்துள்ளார்.
தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் அவர் இதனை பதிவிட்டுள்ளார்.
தமிழ் மக்களின் கோரிக்கைகள்
அந்த பதிவில்,நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை, கைது செய்தது குறித்து நான் ஆழ்ந்த கவலையடைகிறேன்.
அரசியல் தீர்வு மற்றும் பொறுப்புக்கூறலுக்கான தமிழ் மக்களின் கோரிக்கைகளை மௌனமாக்குவதற்கு இலங்கை அரசால் பயன்படுத்தப்பட்ட ஜனநாயக விரோத மிரட்டல் மற்றும் துன்புறுத்தலுக்கு இந்த கைது நடவடிக்கை மற்றொரு உதாரணமாகும் என பதிவிட்டுள்ளார்.
While I welcome the release of MP @GGPonnambalam, I am deeply concerned by his arrest — another example of the anti-democratic intimidation and harassment utilized by the Sri Lankan state to try and silence Tamil people’s demands for a political solution & accountability.
— Congresswoman Summer Lee (@RepSummerLee) June 8, 2023
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

சீன தயாரிப்பு விமானத்தால் பாகிஸ்தான் சுட்டு வீழ்த்திய 2 இந்திய விமானங்கள்: அமெரிக்க நிபுணர்கள் உறுதி News Lankasri

மஞ்சள் கயிறு, நெற்றியில் குங்குமம்.. நம்ம இனியாவா இது? தனுஷ் பாடலுக்கு வைப் செய்யும் காட்சி Manithan
