யாழில் சாதனை படைத்த மாணவிக்கு பாராட்டு
யா/மூளாய் சைவப்பிரகாச வித்தியாலய மாணவி ஜெகதீஸ்வரன் நிரோஜாவின் வரலாற்றுச் சாதனையை பாராட்டும் முகமாக அவருக்கு நேற்றையதினம்(15) கௌரவிப்பு இடம்பெற்றது.
இதன்போது மாணவி, பாடசாலை அதிபர் பா.பாலசுப்பிரமணியம் தலைமையில் நேற்று (15) மூளாய் சித்திவிநாயகர் தேவஸ்தானத்திலிருந்து பேன்ட் வாத்தியத்துடன் அழைத்து வரப்பட்டு பாடசாலை சிவமலர் மண்டபத்தில் கௌரவிக்கப்பட்டுள்ளார்.
முதல் தடவையாக 9ஏ சித்தி
இந்நிகழ்வில் கல்வித் திணைக்களத்தின் சங்கீத ஆசிரிய ஆலோசகர், கிராம உத்தியோகத்தர் ந.சிவரூபன், பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினர், பழையமாணவர் சங்கத்தினர், மலரும் மூளாய் அபிவிருத்தி அமையத்தினர், பாடசாலை முன்னாள் அதிபர், பொது அமைப்பின் பிரதிநிதிகள், நலன்விரும்பிகள் பெற்றோர் என பலரும் கலந்து கொண்டனர்.
குறித்த மாணவி பாடசாலை வரலாற்றில் முதல் தடவையாக 9ஏ சித்திகளை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.









ஈழத் தமிழர் விடுதலைக்கு இனிச் செய்ய வேண்டியது என்ன..! 17 மணி நேரம் முன்

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை யார் தெரியுமா.. இதோ பாருங்க Cineulagam

வீட்டிற்குள் வந்த பார்கவி, அடுத்த திட்டத்தை போடும் குணசேகரன், என்ன அது.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
