வவுனியா மாநகர சபை தொடர்பில் கூட்டணிக் கட்சிகளுக்குள் குழப்பம்
வவுனியா மாநகர சபையில் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் போனஸ் ஆசனம் யாருக்கு என பங்காளிக் கட்சிகளுக்குள் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
குறிப்பாக ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணிக்கு 3 ஆசனங்கள் கிடைத்த நிலையில், ஒரு போனஸ் ஆசனம் பெண் ஒருவரை நியமிப்பதற்கு கிடைத்திருந்தது.
குறித்த முதலாவது போனஸ் ஆசனம் கூட்டணியின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான ரெலோவிற்கு என முன்னர் தீர்மானிக்கப்பட்டிருந்தது.
போனஸ் ஆசனம்
தற்போது மாநகரசபையின் போனஸ் ஆசனத்தை தமக்கு தருமாறு புளொட் கோரியுள்ளது.
மாநகரசபையில் வட்டாரம் வென்ற புளொட் 2 உறுப்பினர்களையும், ஈபிஆர்எல்எப் ஒரு ஆசனத்தையும் கொண்டுள்ள நிலையில் தற்போதைய போனஸ் ஆசனத்தையும் புளொட் கோரியுள்ளது என ரெலோ தெரிவித்துள்ளது. அதற்கு ரெலோ மறுப்பு தெரிவித்துள்ளது.
எனினும் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் செயலாளர் புளொட் அமைப்பாக இருப்பதால் அவர்களின் ஆதிக்கம் மேலோங்கியுள்ளது.
இதனால் ரெலோ தரப்பு குழப்ப நிலையில் உள்ளதாகவும், விரைவில் கூடி கதைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதேவேளை, குறித்த கூட்டணிக்குள் மேயர் தெரிவு மற்றும் போனஸ் ஆசனம் தொடர்பில் பாரிய முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதாகவும் நம்பத்தகு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

புறப்பட்ட 5 நிமிடத்தில் விழுந்து நொறுங்கிய விமானம்: 130 உடல்கள் கருகிய நிலையில் மீட்பு News Lankasri

திருப்பாச்சி படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்த நடிகையா இது! ஆள் அடையாளம் தெரியாமல் மாறிவிட்டார்.. புகைப்படம் இதோ Cineulagam

அருணின் உண்மை முகம் வெளிவந்தது, சீதா புரிந்துகொள்வாரா?.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam

ஏர் இந்தியா விமான விபத்து... கவனத்தை ஈர்க்கும் பிரித்தானியப் பயணியின் கடைசி இன்ஸ்டாகிராம் பதிவு News Lankasri
