பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு விடயத்தில் குழப்பநிலை
இலங்கையின் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பள அதிகரிப்பு தொடர்பான அண்மைய அறிவிப்பில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
ஊடகம் ஒன்றில் பகுப்பாய்வு செய்தியில் இந்த விடயம் ஆராயப்பட்டுள்ளது.
கடந்த மே தின பேரணியின் போது பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளம் 1,700 ரூபாயாக அதிகரிப்படும் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe) அறிவித்தார்
இதன்படி உத்தியோகபூர்வ வர்த்தமானி அறிவிப்பில் நாளாந்த சம்பளம்; 1,350 ரூபாய், 350 ரூபாய் சிறப்பு உதவித்தொகை என்ற வகையில் 1700 ரூபாய் சம்பளமாக குறிப்பிடப்பட்டுள்ளது.
சம்பள உயர்வு
எவ்வாறாயினும், இலங்கை பெருந்தோட்ட நிறுவனங்களின் பேச்சாளர் ரொசான் ராஜதுரை, அனைத்து சலுகைகளையும் சேர்த்து 1200 ரூபாயை மாத்திரமே சம்பளமாக வழங்கமுடியும் என்று அறிவித்துள்ளார்.
இந்தநிலையில் 1,700 நாளாந்த சம்பளத்துக்கு தோட்ட நிறுவனங்கள் இணங்கத் தவறினால் அவர்களுக்கு எதிராக "கடுமையான நடவடிக்கை" எடுக்கப்படும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான்(Senthil Thondaman) எச்சரித்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு உறுப்பினர் அருண் ஹேமச்சந்திர, இலங்கை அரசாங்கம் தொழிலாளர் நல்வாழ்வின் மீது பொதுக் கருத்துக்கு முன்னுரிமை அளிக்கிறதா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மே தினக் கூட்டத்தில் பொதுமக்களின் பங்களிப்பு குறைவாக இருக்குமோ என்ற சந்தேகமே, பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு கணிசமான சம்பள உயர்வை ஜனாதிபதி ஊடாக அறிவிக்கும் நிலையை ஏற்படுத்தியிருக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே இந்த அறிவிப்பின் நேர்மை பற்றி கேள்வி எழுந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |