இந்தியாவிற்கு சவால் விடும் சீன போர்க்கப்பல்: பசுபிக் கடற்பரப்பில் புதிய நகர்வு
பிரமாண்ட போர் கப்பலை சீனா(China) தயாரித்து சமீபத்தில் அறிமுகம் செய்தமையானது இந்தியாவிற்கு பெரும் சவாலாக மாறியுள்ளது.
80 ஆயிரம் தொன் நிறையுள்ள பிரம்மாண்ட விமானம் தாங்கி போர்க்கப்பலாக இது அமைந்திருந்துள்ளது.
இதற்கு ஃபியூஜியன் என சீன தரப்பு பெயரிட்டுள்ளது.
மிக நவீன தொழில்நுட்பத்தில் இந்த கப்பலை சீனா தயாரித்துள்ளதால், அந்நாட்டு கடற்படையில் இதன் வரவு முக்கிய மைல்கல்லாக இருக்கும் என நம்பப்படுகிறது.
இந்திய - பசிபிக் கடல் பகுதி
குறித்த கப்பல் சீன கடற்படையில் இணைந்தபின், இந்திய - பசிபிக் கடல் பகுதியில் அதன் பலம் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த திட்டமானது இந்திய கடற்படைக்கு பெரும் சவாலாக அமைந்துள்ளது.
இந்திய கடற்படையில் தற்போது ஐஎன்எஸ் விக்ரமாதித்யா மற்றும் ஐஎன்ஸ் விக்ராந்த் ஆகிய இரு விமான தாங்கி போர்க்கப்பல்கள் மாத்திரமே கொண்டுள்ளது.
தற்போது அமெரிக்கா, சீனா, இத்தாலி, இங்கிலாந்து, இந்தியா, ஜப்பான், பிரான்ஸ், ஸ்பெயின் மற்றும் ரஷ்ய கடற்படைகளில் விமானம் தாங்கி போர்க்கப்பல்கள் காணப்படுகின்றன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 5 நாட்கள் முன்

திருமணத்தை முடித்த ஜனனிக்கு அடுத்து வந்த ஷாக்கிங் தகவல், என்ன நடக்கும்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

எதர்சையாக சீதா-மீனாவிற்கு தெரியவந்த அருண் பற்றிய உண்மை, முத்து தான் செய்தாரா?... சிறகடிக்க ஆசை எபிசோட் Cineulagam
