வடக்கு மாகாண ஆளுநர் பதவியில் குழப்பம்? கொழும்பு ஊடகம் தகவல்
வடக்கு மாகாண ஆளுநர் பதவியில் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
வட மாகாண ஆளுநராக ஜீவன் தியாகராஜா ஜனாதிபதி முன்னிலையில் இன்று சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
எனினும், கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வட மாகாண ஆளுநரான பீ.எஸ்.எம்.சார்ள்ஸ் கலந்துகொண்டிருந்தார். கல்கிசையில் உள்ள, வட மாகாண ஆளுநரின் கொழும்பு காரியாலயத்தில் இந்த ஊடக சந்திப்பு இடம்பெற்றிருந்தது.
இதன்போது அவர் பதவி மாற்றம் குறித்தோ, அல்லது பதவி விலகுவது குறித்தே எதுவும் தெரிவிக்கவில்லை.
இந்நிலையில், பதவி மாற்றம் குறித்து தமது அலுவலகத்துக்கோ, ஆளுநருக்கோ எவ்வித உத்தியோகபூர்வ அறிவிப்புகளும் கிடைக்கப்பெறவில்லை என வட மாகாண ஆளுநரின் இணைப்பதிகாரி கொழும்பு ஊடகம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், வட மாகாண ஆளுநராக தொடர்ந்தும் பீ.எஸ்.எம்.சார்ள்ஸே செயற்பட்டுவருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கடைசி நேரத்தில் தேர்தலில் நடந்த மாற்றம், வெற்றியை தட்டித் தூக்கிய மீனா... சிறகடிக்க ஆசை சூப்பர் எபிசோட் Cineulagam
மாகாபா, புகழ், கானா வினோத் மீது போலீஸில் புகார் அளித்த Watermelon திவாகர்... ரகளையான CWC செட் Cineulagam
அடுத்த சில வாரங்களுக்குள்... ஈரானுக்கு சீனாவின் பேருதவி: அமெரிக்க உளவுத்துறை வெளிப்படை News Lankasri