இலங்கையில் குழப்பத்தில் உள்ள வாக்காளர்கள்
இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவிருக்கும் ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களுக்கு கட்சிகள் தயாராகி வருகின்றன.
இந்தநிலையி;ல் கருத்துக் கணிப்பை நடத்தி இந்தியாவில் நரேந்திர மோடியின் வெற்றியை முன்னறிவித்த சர்வதேச தகவல் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்று, இலங்கையில் அனைத்து ஜனாதிபதி வேட்பாளர்கள் குறித்தும் விரிவான மக்கள் கருத்துக் கணிப்பு நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கணக்கெடுப்பு
இந்திய அமெரிக்கர்களால் நடத்தப்படும் இந்த நிறுவனம இலங்கையில் (Sri Lanka) சுமார் 9.3 மில்லியன் பேரின் சமூக ஊடக கணக்குகளை ஆய்வு செய்து அவர்களின் கணக்கெடுப்பை நடத்தத் தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிறுவனம், சமூக ஊடக போக்குகளை ஆய்வு செய்து, மூன்று முக்கிய ஜனாதிபதி வேட்பாளர்களான ரணில் விக்ரமசிங்க, அனுரகுமார திஸாநாயக்க மற்றும் சஜித் பிரேமதாச ஆகியோர் தொடர்பிலான சதவீத மாற்றங்கள் குறித்து அதிகாரிகளுக்கு ஒவ்வொரு இரண்டு வாரங்களுக்கும் அறிவிப்புகளை வழங்கி வருகிறது.
இந்தநிலையில் குறித்த நிறுவனத்தின் அண்மைய அறிக்கையில், மூன்று வேட்பாளர்களும் 25 சதவீதத்தை கூட எட்டவில்லை என்று கணித்துள்ளது.
இந்தியத் தேர்தல்
விக்ரமசிங்க, அனுரகுமார மற்றும் சஜித் பிரேமதாச ஆகிய மூவரும் சராசரியாக 21 மற்றும் 22 வீத வாக்குகளை பேணி வருகின்றனர்
எனினும் தீர்மானிக்கப்படாத வாக்காளர்கள் 35 வீதத்திற்கு மேல் பட்டியலிடப்பட்டுள்ளனர்.அவர்களே இறுதி முடிவுக்கு உரித்துடையவர்களாக இருப்பார்கள்.
இதே நிறுவனம் இந்தியத் தேர்தலில் பாரதிய ஜனதாவின் வெற்றியை சரியாகக் கணித்துள்ளது,மோடி மகத்தான வெற்றியின் மூலம் ஆட்சிக்கு வர மாட்டார் என்று கூறியிருந்தது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |