திருகோணமலையில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் மூவர் பாதிப்பு
திருகோணமலை - மொரவெவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மஹதிவுல்வெவ குளத்தில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மஹதிவுல்வெவ குளத்துக்கு அருகில் உள்ள காட்டுப் பகுதியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸாருக்கும், இராணுவத்தினருக்கும் தகவல் வழங்குவதாகத் தெரிவித்து குழுவொன்று நபரொருவரை தாக்க முற்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த நபர் கத்தியால் தாக்கியதில் இருவர் காயமடைந்து அருகிலுள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவத்தில் மஹதிவுல்வெவ பிரதேசத்தைச் சேர்ந்த 23 மற்றும் 25 வயதுடையவர்கள் படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை கத்தியால் தாக்கிய நபர், தம்மை குறித்த குழுவினர் தாக்க வந்ததாக குற்றம்சாட்டியுள்ளனர் அவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
குறித்த சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகளை மொரவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.






தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 2 நாட்கள் முன்

மீனாவிற்கு பிரச்சனை கொடுக்க நினைத்து வம்பில் சிக்கிய ரோஹினி, இது தேவையா?.. சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ Cineulagam
