தோல்வியை ஏற்றுக் கொள்ள முடியாத நிலையில் ரணில்! ஓய்வு பெற விரும்பவில்லை
மக்கள் மாறிவிட்டார்கள், தன்னை நிராகரித்துவிட்டார்கள் என்பதை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவால் புரிந்து கொள்ள முடியவில்லை என்று பிரதமர் ஹரிணி அமரசூரிய(Harini Amarasuriya) தெரிவித்துள்ளார்.
பொதுமக்களால் பல முறை நிகராரிக்கப்பட்டு, தனது தொகுதியிலேயே பல முறை தோல்விகண்ட ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe) எனக்கு எப்படி அரசமைப்பு தொடர்பில கற்பிக்க முடியும் என்றும் பிரதமர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மக்கள் மாறிவிட்டார்கள்
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
தேர்தலில் 17 முறை தோல்வியடைந்த போதிலும் ரணில் விக்ரமசிங்க அரசியலில் இருந்து விடைபெறவில்லை. தொடர்ந்தும் தனது அரசியல் வாழ்க்கையிலேயே தொங்கிக் கொண்டிருக்கின்றார். ஓய்வு பெற விரும்பவில்லை.

மக்கள் மாறிவிட்டார்கள் என்பதையும் தன்னை நிராகரித்துவிட்டார்கள் என்பதையும் அவரால் புரிந்துகொள்ள முடியவில்லை.
பொதுமக்களின் ஆணையே அரசமைப்பின் அடிப்படை. இதனை புரிந்துகொள்ளாத ஒருவர் எனக்கு எப்படி அரசமைப்பு குறித்து கற்பிக்க முடியும்? அரசமைப்பினை நன்கறிந்த ஒருவர் தேர்தல்களை ஒத்திவைக்கமாட்டார்.
தேசிய பேரவை நீதித்துறையின் தீர்மானங்களில் தலையிடமாட்டார், எனக்கு அரசமைப்பினை கற்பிப்பது என்றால் ரணில் விக்ரமசிங்கவிற்கு இந்த அடிப்படைகள் தெரிந்திருக்கவேண்டும்.

தங்களிற்கு அனைத்தும் தெரியும் ஏனையவர்களிற்கு எதுவும் தெரியாது என நினைத்து செயற்பட்ட தலைவர்களாலேயே இலங்கை அழிந்துபோனது.
அவ்வாறான அரசியல் கலாசாரத்தை முடிவிற்கு கொண்டுவருவதற்கு அநுரகுமார திஸாநாயக்கவின் அரசாங்கம் முயற்சி செய்து கொண்டிருக்கின்றது என குறிப்பிட்டுள்ளார்.
கும்ப ராசியில் புதன் பெயர்ச்சி: பெப்ரவரியில் இந்த 3 ராசிக்காரங்களுக்கு ட்ரிபிள் ஜாக்பாட் தான்! Manithan
நிலா மீது கடும் வருத்தத்தில் இருக்கும் சோழனுக்கு ஷாக் கொடுத்த ஒரு சம்பவம்... அய்யனார் துணை எபிசோட் Cineulagam