அநுரவை ஆதரிப்பதில் சாணக்கியன் சுமந்திரனிடையே முரண்
யாழ்ப்பாணத்திற்கு ஒரு சில பௌத்தர்கள் வருவது ஆன்மீகரீதியான விடயங்கசளுக்கு அல்ல, இனவாதத்தை பரப்புவதற்கு என்று அண்மையில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க யாழில் கூறியிருந்தார்.
அதனை தொடர்ந்து ஜனாதிபதிக்கு முதுகெழும்பு உள்ளது , யாழில் தைரியத்துடன் பேசிய ஒரே ஜனாதிபதி இவர தான் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் பேசியுள்ளார்.
இதேவேளை, தம்புத்தேகமவில் நடைபயிற்சி செய்யாதவர்கள், ஏன் யாழில் வந்து நடைபயிற்சி செய்தார் என்று நாங்கள் கேட்டால் இனவாதம் என்று கூறுவார்கள் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
எனவே இவர்கள் இருவருக்கிடையிலேயே ஒரு முரண் காணப்படுகின்றது.
இந்த விடயங்கள் தொடர்பில் பேசுகின்றது இன்றைய நாட்டு நடப்புகள் நிகழ்ச்சி..