ஐரோப்பிய நாடொன்றில் கணவனை கொடூரமாக கொலை செய்த இலங்கை மனைவி
இத்தாலியின், ப்ரேஷியா நகரத்தில் வாழும் இலங்கை பெண்ணின் தாக்குதலில் அவரது கணவன் உயிரிழந்துள்ளார் என செய்தி வெளியாகியுள்ளது.
குடும்ப பிரச்சினை நீண்ட தூரம் சென்றமையினால் மனைவி கூர்மையான ஆயுதத்தினால் தாக்கியமையினால் காயமடைந்த கணவன் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கடந்த 23ஆம் திகதி இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ப்ரேஷியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். தனது கணவருக்கு இன்னும் ஒரு பெண்ணுடன் தொடர்பிருப்பதாக ஏற்பட்ட சந்தேகத்திற்கமைய இலங்கை தம்பதிக்கு இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.
மோதல் நீண்ட தூரம் சென்றமையினால் அது கொலையில் முடிந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர் 48 வயதான இலங்கையர் என உறுதியாகியுள்ளது. அத்துடன் இந்த கொலை தொடர்பில் 44 வயதுடைய இலங்கை பெண் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.