மண்டபம் அருகே 1360 கிலோகிராம் கடல் அட்டைகள் பறிமுதல்
அரசால் தடை செய்யப்பட்ட 1360 கிலோகிராம் கடல் அட்டைகள் மண்டபம் அருகே நேற்று (02) காலை நாட்டு படகுடன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
குறித்த கடல் அட்டைகள் மற்றும் நாட்டு படகு அடுத்த கட்ட விசாரணைக்காக மண்டபம் வனத்துறை அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்திய கடலோர காவல் படை மற்றும் மண்டபம் சுங்கத் துறையினர் இணைந்து தெற்கு மன்னார் வளைகுடா கடல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சோதனை
இதன்போது மண்டபம் தோணித்துறை பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த நாட்டுப்படகு சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
அதில் 80 இற்கும் மேற்பட்ட மூட்டைகளில் சுமார் 1360 கிலோகிராம் எடை கொண்ட அரசால் தடை செய்யப்பட்ட கடல் அட்டைகள் இருந்துள்ளன.
இந்த நிலையில் கடலில் குதித்து தப்பித்த சந்தேகநபர்களை தேடும் நடவடிக்கை தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.




