அம்பாறையில் தமிழ் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துவதற்கு கோரிக்கை
தமிழ் பிரதிநிதித்துவத்தை அம்பாறை மாவட்டத்தில் உறுதிப்படுத்த அனைத்து கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் என கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் குமாரசாமி புஸ்பகுமார் தெரிவித்துள்ளார்.
அம்பாறை ஊடக அமையத்தில் சமகால அரசியல் விடயங்கள் தொடர்பில் நேற்று (30.09.2024) இரவு இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் தமிழ் பிரதிநிதித்துவத்தை பெற்றுக்கொள்ள அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.
ஒத்துழைப்பு
ஏனெனில், கடந்த கால தேர்தலில் அம்பாறை மாவட்டத்திற்கு கிடைக்க வேண்டிய தமிழ் பிரதிநிதித்துவத்தை இல்லாமல் செய்வதற்கு பல்வேறு தரப்பினரும் அம்பாறை மாவட்டத்திற்கு வருகை தந்து எமது மக்களின் வாக்குகளை சிதறடித்தனர்.
இம்முறையும்
அவ்வாறு எமது பிரதிநிதித்துவத்தை இழந்து விடாமல் இருப்பதற்கு சகல கட்சிகளும்
ஒன்றிணைய சகலரும் ஒத்துழைப்பு செய்ய முன்வர வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஈழத்தமிழ் அரசியலின் மூத்த தலைவர் மறக்கப்பட்டாரா..! 15 நிமிடங்கள் முன்

பாகிஸ்தானுக்கு பெரும் பின்னடைவு... செயல்பாடுகளை நிறுத்தும் பெரும் தொழில்நுட்ப நிறுவனம் News Lankasri

ஒரே ஒரு விளம்பரம் தான்! தமிழ் சினிமாவை கலக்கி கொண்டிருக்கும் இசையமைப்பாளர்.. யார், எப்படி? Cineulagam

சீனா, பாகிஸ்தானுக்கு கவலை அதிகரிப்பு., இந்திய விமானப்படைக்கு 3 ISTAR விமானங்கள் வாங்க ஒப்புதல் News Lankasri
