இலங்கை அரசுக்கு வழங்கப்பட்டுள்ள இரகசிய அறிக்கை! எதிர்வரும் ஆபத்தான நாட்கள் (VIDEO)
அரசியல்வாதிகள் மீது மக்கள் கடும் கோபத்தில் உள்ளமையினால் பொது நிகழ்வுகளிலும், வெளியிடங்களிலும் அரசியல்வாதிகள் செல்வதினை தவிர்க்குமாறு இலங்கை அரசாங்கத்திற்கு புலனாய்வு பிரிவினர் இரகசிய அறிக்கையொன்றினை வழங்கியுள்ளதாக அரசியல் ஆய்வாளர் எம்.எம்.நிலாம்டீன் தெரிவித்துள்ளார்.
எமது ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையின் நடவடிக்கை தொடர்பில் சர்வதேச நாயண நிதியத்திற்கு புலம்பெயர் அமைப்புக்கள் பல கடிதங்களை அனுப்பியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதன் காரணமாகவே ரணில் விக்ரமசிங்க வெளிப்படையாக சர்வதேச நாயண நிதியத்திடமிருந்து தற்போது இலங்கைக்கு எவ்வித கடன் தொகையும் கிடைக்கபெறாது என்பதினையும் தெரிவித்துள்ளார்.
மேலும்,இலங்கையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி காரணமாக நாடு இன்னும் இரண்டு வாரங்களில் தானாகவே முடங்கும் நிலை உருவாகும் என்றும் தெரிவித்துள்ளார்.
Bigg Boss: சட்டென பணப்பெட்டியை எடுத்த கானா வினோத்! ஒட்டுமொத்த வீடும் கண்ணீரில் மூழ்கிய தருணம் Manithan
பரபரப்பான கதைக்களத்திற்கு நடுவில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் ஏற்பட்ட மாற்றம்... முழு விவரம் Cineulagam