சூறாவளி அல்லது சுனாமி அடித்தாலே தவிர தமிழரசுக் கட்சியின் மாநாடு திட்டமிட்டபடி நடைபெறும்: சி.வி.கே. உறுதி
சூறாவளி அல்லது சுனாமி அடித்தாலே தவிர இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாடும், புதிய தலைவர் தெரிவும் திட்டமிட்டபடி நடைபெறும் என்று கட்சியின் சிரேஷ்ட தலைவர்களில் ஒருவரான சி.வி.கே. சிவஞானம் தெரிவித்தார்.
தமிழரசுக் கட்சியின் புதிய தலைவர் தெரிவு தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
பொதுச் சபைக் கூட்டம்
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,
"கடந்த 18 ஆம் திகதி எங்களுடைய கட்சியின் அரசியல் குழுக் கூட்டம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து கட்சியின் பொதுச் சபைக் கூட்டமும் புதிய தலைவர் உள்ளிட்ட நிர்வாகத் தெரிவும் இடம்பெற இருக்கின்றன.

ஆனால், எந்தக் காரணம் கொண்டும் கட்சிக்கான புதிய தலைவர் தெரிவு அல்லது பொதுச் சபைக் கூட்டம் ஒத்திவைக்கின்ற எண்ணத்தில் கடந்த கூட்டத்தில் கலந்துகொண்டவர்களில் பெரும்பாலானவர்கள் இல்லை.
ஆகவே, தெரிவு என்பதில் தெளிவாகவே நாங்கள் இருக்கின்றோம்.
மாற்று எண்ணத்திலும் எவரும் இல்லை. தேசிய மாநாட்டுக் கூட்டத்தை குறிப்பிட்ட திகதியில் நடத்த வேண்டும் என்ற எண்ணத்தில்தான் சகலரும் உறுதியாக இருக்கின்றனர்.
தலைவர் தெரிவு
ஆகையினாக் திட்டமிட்டபடி நிச்சயமாக இந்தக் கூட்டம் நடைபெறும். அதில் எந்தச் சந்தேகமும் இல்லை. அதில் தலைவர் தெரிவும் நடைபெறும்.
அந்தத் தெரிவில் போட்டி இருக்குமா, இல்லையா என்பது குறித்து எல்லாம் எனக்குச் சொல்லத் தெரியவில்லை. ஆனால், நிச்சயமாகத் தலைவர் உள்ளிட்ட நிர்வாகத் தெரிவு நடக்கும்.

இவை நடைபெறும் வாய்ப்புக்கள் 90 வீதம் இருக்கின்றன. எனினும், வேறு ஏதும் தேசிய பிரச்சினை, அல்லாவிடின் சூறாவளி அல்லது சுனாமி அடித்தால் ஒன்றும் செய்ய முடியாது. எனவே, கூட்டமும் தெரிவுகளும் அறிவிக்கப்பட்டபடி நிச்சயம் நடைபெறும்" என குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
சீரியல் நடிகர் வெற்றி வசந்த், வைஷு வீட்டில் ஏற்பட்ட உயிரிழப்பு... சோகத்தில் குடும்பம், பிரபலம் பதிவு Cineulagam
ரஷ்ய பாதுகாப்புத்துறை அதிகாரிக்கு இணையத்தில் கிடைத்த தோழி: பின்னர் காத்திருந்த அதிர்ச்சி News Lankasri
Bigg Boss: கொடுத்த வேலையை பார்க்க வக்கில்ல.... நான் உங்ககிட்ட பேசலை! திவ்யாவை கிளித்தெடுத்த விஜய்சேதுபதி Manithan