சஜித் பிரேமதாச தலைமையில் கொழும்பில் ஆரம்பமான திட்டமிடல் மாநாடு
இலங்கையின் மிகப்பெரிய புத்திஜீவிகள் இணைந்த ஐக்கிய புலனாய்வு மையத்தின் 2004 தேசிய சம்மேளனம் மற்றும் கொள்கை கலந்துரையாடல் சபை ஆகியன இணைந்து நடத்தும் "நாட்டை கட்டியெழுப்பும் அறிவு "எனும் மாநாடு கொழும்பில் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் ஆரம்பமாகியுள்ளது.
குறித்த நிகழ்வானது இன்று பிற்பகல் 3.00 மணிமுதல், இரவு 10.00 மணிவரை நடைபெறவுறள்ளது.
[K0JDWKG ]
சஜித் பிரேமதாச தலைமையில்
எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் இலங்கையை மீளக்கட்டியெழுப்புவதற்கான விஞ்ஞான மற்றும் பிரயோக ரீதியிலான கொள்கைகள் குறித்து கலந்துரையாடுவது மற்றும் திட்டமிடுவதே குறித்த மாநாட்டின் நோக்கமாகும்.
அதற்காக தமது ஒத்துழைப்பை ஐக்கிய மக்கள் சகதிக்கு வழங்குவதற்கு, நாட்டிலுள்ள அனைத்து அரச பல்கலைக்கழகங்கள், தனியார் பல்கலைக்கழகங்கள் பல இணைந்த இலங்கையின் மிகப்பெரிய புத்திஜீவிகள் கூட்டாண ஐக்கிய புலனாய்வு மையம் திட்டமிட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |