சிங்கள அரசாங்கத்தின் கபட நோக்கத்துக்கு துணைபுரியும் கூட்டமைப்பு!தமிழினி மாலவன்

Ranil Wickremesinghe Sri Lanka Economic Crisis Sri Lanka Tamil National Alliance
By Erimalai Aug 05, 2022 08:33 PM GMT
Report

சிங்கள இனவழிப்பு ஒற்றையாட்சி அரசுடன் பேச்சு நடத்தியமை மீண்டும் சர்வதேச சமூகத்திற்கு காலத்தைக் கடத்தும் சிங்கள அரசாங்கத்தின் கபட நோக்கத்துக்கு கூட்டமைப்பின் எம்பிகள் துணைபுரிவதாகவே அமைந்துள்ளது என வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட ஈழத்தமிழரின் உறவினர் அமைப்பின் ஊடகபேச்சாளர் தமிழினி மாலவன் தெரிவித்துள்ளார்.

யாழ்.ஊடக அமையத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில்,

ஈழத்தமிழர் மீது மேற்கொள்ளப்பட்ட கட்டமைக்கப்பட்ட இனவழிப்பு குற்றங்கள் மனித இனத்துக்கெதிரான குற்றங்களுக்கு காரணமானவர்களோடு பேச்சு நடத்தியமை இலங்கை ஒற்றையாட்சி அரசை பலப்படுத்தி, கூட்டமைப்பின் கதிரை அரசியலுக்கு வெள்ளை அடிக்கும் செயலாகவே நாம் பார்க்கின்றோம்.

ஈழத்தமிழர்களின் கோரிக்கை

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினை, இனப்படுகொலை என்பன தொடர்பில் சர்வதேசமே விசாரணைகளை நடத்த வேண்டும் என்பது தான் ஈழத்தமிழர்களின் கோரிக்கையாகும். இவை தொடர்பில் இலங்கை அரசாங்கத்துடன் பேச்சு நடத்துவற்கான ஆணையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஈழத்தமிழர்கள் ஒருபோதும் வழங்கவில்லை.

இலங்கை அரசு உள்ளுர் பொறிமுறையின் மூலமாகத் தீர்வு காணப்படும் என தொடர்ந்து தெரிவித்து வரும் நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதனுடன் பேச்சுக்களை நடத்தியமை சர்வதேச விசாரணையில் இருந்து இலங்கை அரசை பிணை எடுக்கும் சதி முயற்சியாக நாம் பார்க்கின்றோம்.

சர்வதேச விசாரணையில் இருந்து தப்பித்துக்கொள்ள சிங்கள இனவழிப்பு அரசு ஒவ்வொரு ஐ.நா அமர்வையும் சமாளிக்க கூட்டமைப்பின் கதிரை அரசியலை சந்தர்ப்பமாக பயன்படுத்தி வருகின்றது.

கடந்த காலத்தில் தைப்பொங்கல், தீபாவளி புதுவருடம் ஒவ்வொன்றின் போதும் நம்பிக்கைகள் எல்லாம் காற்றோடு பறந்த அனுபவங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு பாடமாகப் படித்திருப்பதாகத் தெரியவில்லை.

இலங்கை அரசின் நிகழ்ச்சி நிரலுக்குள் கூட்டமைப்பு

இனவழிப்பு மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக ஒரு போதும் கொலையாழிகள் தீர்வைத் தரப்போவதில்லை. மீண்டும் மீண்டும் அதில் நம்பிக்கை வைத்துச் செயற்படுவது இலங்கை அரசின் நிகழ்ச்சி நிரலுக்குள் கூட்டமைப்பைக் கொண்டு செல்வதற்கே வழிவகுக்கும்.

அரசியல் தீர்வு மற்றும் அதிகாரப்பரவலாக்கல் என்பன தொடர்பாக இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுக்களை நடத்துவது கூட்டமைப்பின் ஆயுட்கால அரசியலாகும். ஆனால், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினை மற்றும் இன அழிப்பு என்பவற்றுக்கு இந்த அரசாங்கமே காரணமாக இருந்துள்ளது.

இனவழிப்பில் ஈடுபட்ட குற்றவாளிகளிடம் தீர்வை எதிர்பார்ப்பதோ அதற்கான பேச்சுக்களை நடத்துவதோ இனவழிப்பு குற்றவாளிகளை நீதிபதிகளாக்கும் செயலாகும். இந்த பின்னணியில் இன அழிப்பு அரச தலைவருடன் பேச்சுக்களை நடத்தியதன் காரணமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமது ஆயுட்கால அரசியலை தக்கவைக்கும் முயற்சியாக இது இருக்கும் என நம்புகின்றோம் என தெரிவித்துள்ளார்.

மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US