மறைந்த சீதா ரஞ்சனிக்கு ஊடக ஊழியர்கள் தொழிற்சங்க பேரவை இரங்கல்
மூத்த ஊடகவியலாளர் மற்றும் ஊடக சுதந்திர போராட்ட செயற்பாட்டாளர் சீதா ரஞ்சனியின் மறைவுக்கு ஊடக ஊழியர்கள் தொழிற்சங்க பேரவை தனது ஆழ்ந்த துக்கத்தை தெரிவித்துள்ளது.
இது தொடர்பில், ஊடக ஊழியர்கள் தொழிற்சங்க பேரவை தமது இரங்கல் செய்தியை அறிக்கை ஒன்றின் ஊடாக தெரிவித்துள்ளது.
குறித்த அறிக்கையில், "பல தசாப்தங்களாக துடிப்புடன் ஊடக சுதந்திரத்திற்காகவும், சமூக நீதிக்காகவும் போராடிய அவரின் இழப்பு ஊடக உலகத்திற்கும், ஜனநாயகத்தை மதிக்கும் அனைவருக்கும் பேரிழப்பாகும்.
பெண்கள் உரிமைகளுக்கும், தமிழர் பிரச்சினைக்கும் ஆற்றிய நிலையான பங்களிப்பு சீதா ரஞ்சனி ஊடகத்துறையின் முன்னணி செயற்பாட்டாளராகவும், ஊடகச் சுதந்திரத்திற்கு எதிரான அடக்குமுறைக்கு எதிராக வலுவான குரலாகவும் இருந்தார்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் உள்ளடக்கப்பட்டுள்ளதாவது,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



ரஜினி, கமல் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் கலந்துகொண்ட ஐசரி கே கணேஷ் மகள் திருமணம்.. புகைப்படங்கள் இதோ Cineulagam

Super Singer: Duet Round சுற்றில் நடுவர்களை வியக்க வைத்த போட்டியாளர்கள்- இறுதி நடந்த குழப்பம் Manithan
