குறிஞ்சாக்கேணி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்த நாடாளுமன்ற உறுபினர்
குறிஞ்சாக்கேணி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் க.வி.விக்னேஸ்வரன் (C.V.Vigneswaran) தெரிவித்துள்ளார்.
இன்று வெளியிட்ட ஊடக அறிக்கையின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மெலும் தெரிவிக்கையில்,
குறிஞ்சாக்கேணி பாதை விபத்தில் தமது இன்னுயிர்களை நீத்த பாடசாலை மாணவர்கள் உட்பட ஆறு பேரின் ஆத்மா அமைதி பெற முதற்கண் எனது பிரார்த்தனையையும், அவர்களின் பெற்றோர் உறவினர்களுக்கான எனது மனதார்ந்த இரங்கல் செய்தியையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.
முழுக்க முழுக்க பாதுகாப்பற்ற ஒரு பாதையை தயார்செய்து அதன் பயணப் பாதுகாப்பிற்கு எந்தவித உத்தரவாதமும் அற்ற நிலையில் அது சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
குறிஞ்சாக்கேணியில் வாழ்கின்ற மக்கள் திருகோணமலை, கிண்ணியா போன்ற இடங்களுக்குச் செல்வதற்கு இந்த ஒரு பாதை மட்டுமே காணப்பட்டதால் மக்களும், மாணவர்களும் எப்படியும் இதில் பயணம் செய்ய வேண்டியிருந்தது.
இவ் விடயத்தைக் கவனிக்க வேண்டிய பிரதேசசபை, நகரசபை, வீதி அபிவிருத்தி அதிகாரசபை, துறைசார்ந்த அமைச்சுக்கான அமைச்சர், பிரதம மந்திரி அனைவரும் கூட்டுப் பொறுப்பை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
பயன்படுத்தப்பட்ட பாதை பயண ஒழுங்குக்கு ஏற்றதல்ல என அனுமதி மறுப்புத் தெரிவித்த வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு மாற்று ஒழுங்கு ஒன்றை ஏற்படுத்த முடியாமல் போனமை வேதனைக்குரியது.
ஆறு இன்னுயிர்களை காவு கொடுத்த பின்பு பயன்படுத்தப்படுகின்ற ஐந்து பெருந்து வண்டிகளையும் முன்பே சேவையில் ஈடுபடுத்தியிருந்தால் இந்த அனர்த்தம் இடம் பெற்றிருக்காது.
வடக்கு கிழக்கில் அபிவிருத்தி தொடர்பில் எம்மால் முன்மொழியப்படுகின்ற கோரிக்கைகள் உடனடியாகவே குப்பைக் கூடைக்குள் போடுவதற்கு யார் காரணம் என்பதை இனியேனும் எல்லோரும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
இனிவரும் காலங்களிலாவது இனவிரோத செயற்பாடுகளைத் தவிர்த்து அத்தியாவசியத் தேவை அடிப்படையில் நிதி ஒதுக்கீடுகளை அரசாங்கம் மேற்கொள்ள நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றேன் என தெரிவித்துள்ளார்.
மேலும் இலங்கை செய்திகளை உங்களது Whatsapp இற்கு பெற்றுக்கொள்ள இங்கே கிளிக் செய்யவும்! |
தொடர்புடைய செய்தி.........
குறிஞ்சாக்கேணி பாலம் தொடர்பில் அரசாங்கம் வழங்கியுள்ள உறுதிமொழி
குறிஞ்சாக்கேணி பாலத்தை நிர்மாணிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்: முன்னாள் ஆளுநர்

தாஸ் படத்தில் ரவி மோகன் ஜோடியாக நடித்த நடிகையை நினைவு இருக்கா! இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா Cineulagam
