குறிஞ்சாக்கேணி பாலத்தை நிர்மாணிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்: முன்னாள் ஆளுநர்
கிண்ணியா, குறிஞ்சாக்கேணி பாலத்தை நிர்மாணிக்க அப்பகுதி அரசியல் தலைவர்கள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புழ்ழாஹ் (M.L.A.M. Hizbullah) தெரிவித்துள்ளார்.
இன்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் குறித்த விடயத்தை கூறியுள்ளார்.
அதில் மேலும்,
இன்று காலை கிண்ணியா, குறிஞ்சாக்கேணி பகுதியில் உள்ள ஆற்றில் 20 மாணவர்களுடன் பயணித்த படகு கவிழ்ந்ததில் 6 மாணவர்கள், மரணமடைந்தனர். இச்சம்பவம் கேட்டு ஆழ்ந்த கவலை அடைகின்றேன்.
இது ஒரு மிகப் பரிதாபமான சம்பவமாகும். இந்தப்பாலம் அமைக்க பலராலும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதும் அமைக்கப்படாதது துரதிஷ்டவசமாகும்.
அது அமைக்கப்பட்டிருந்தால் அல்லாஹ்வின் நாட்டம் இம் மரணங்களைத் தடுத்திருக்க முடியும்.
இப் பாலமானது நிர்மாணிக்க அப்பகுதித் அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்வது மிகவும் அத்தியாவசியமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
| மேலும் இலங்கை செய்திகளை உங்களது Whatsapp இற்கு பெற்றுக்கொள்ள இங்கே கிளிக் செய்யவும்! |
இலங்கை பாடகர் சபேசனுக்கு வாழ்க்கையில் மறக்க முடியாத விஷயத்தை செய்த எஸ்.பி.சரண்... எமோஷ்னலான மேடை Cineulagam
மிக மோசமான வீழ்ச்சி... மில்லியன் கணக்கானோர் பாதிக்கப்படலாம்: எச்சரிக்கும் பொருளாதார நிபுணர்கள் News Lankasri