மறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பந்தனுக்கு சபையில் வெள்ளியன்று அனுதாபம்
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் (ITAK) தலைவரும் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான மறைந்த இரா. சம்பந்தனுக்கு அனுதாபம் தெரிவிக்கும் பிரேரணை மீது நாடாளுமன்றத்தில் எதிர்வரும் 24ஆம் திகதி விவாதம் நடைபெறவுள்ளது.
நாடாளுமன்றம் எதிர்வரும் 21 முதல் 24 ஆம் திகதிவரை கூடவுள்ளது.
இதன்போது 24 ஆம் திகதி வெள்ளிக்கிழமை, மறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பான அனுதாபப் பிரேரணைக்காக முழு நாளும் ஒதுக்கப்படவுள்ளது.
அதற்கமைய, மறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சம்பந்தன், ருக்மன் சேனாநாயக்க, ரொஜினோல்ட் பெரேரா, சிறினால் த மெல் மற்றும் மொஹமட் இல்யாஸ் ஆகியோர் தொடர்பான அனுதாபப் பிரேரணைக்காக அன்றைய தினம் மு.ப. 9.30 முதல் பி.ப. 5.30 வரை ஒதுக்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீர தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |