சர்வதேச நாணய நிதியத்தின் முக்கிய நிபந்தனையொன்றை வெளிப்படுத்திய அமைச்சர்

International Monetary Fund Parliament of Sri Lanka A D Susil Premajayantha IMF Sri Lanka
By Mayuri Apr 28, 2023 03:30 AM GMT
Report

சர்வதேச நிதியத்தின் அத்தனை நிபந்தனைகளையும் அரசாங்கம் நடைமுறைப்படுத்துவதில்லை என அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

எனினும் நடைமுறைப்படுத்த வேண்டியவற்றை சட்டத்தைக் கொண்டு வந்து அரசாங்கம் நடைமுறைப்படுத்தும் எனவும், சர்வதேச நாணய நிதியத்தின் ஒரு நிபந்தனை தான் ஊழல் மோசடிகளை நிறுத்துவது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தில் வைத்து நேற்றைய தினம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

மேலும் கூறுகையில், சர்வதேச நாணய நிதியம் என்பது அமெரிக்காவின் ஒரு வங்கியல்ல. அவ்வாறு எண்ணிக்கொண்டே பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஐக்கிய நாடுகள் சபையில் அங்கம் வகிக்கும் 196 நாடுகளில் பெருமளவு நாடுகள் அதில் அங்கத்துவம் வகிக்கின்றன.

ஐ.எம்.எப் ஒரு நிதியம்

சர்வதேச நாணய நிதியத்தின் முக்கிய நிபந்தனையொன்றை வெளிப்படுத்திய அமைச்சர் | Conditions Of International Funding To Sri Lanka

அது ஒரு நிதியம் என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். அந்த நிதியத்தின் பெரும் பகுதியை அமெரிக்கா கொண்டுள்ளது. அதற்கு அடுத்ததாக ஜப்பான், சீனா போன்ற நாடுகள் உள்ளன. நாம் சீனாவிடமும் 7 பில்லியன் டொலருக்கும் அதிகமான இருதரப்பு கடனைப் பெற்றுக் கொண்டுள்ளோம். அது பிரத்தியேகமானது.

பெருமளவு நாடுகள் அங்கத்துவம் வகிக்கும் நிதியத்திடமே எமது பொருளாதார வீழ்ச்சியிலிருந்து நாட்டை கட்டியெழுப்புவதற்காக நாம் கடன் ஒத்துழைப்பை பெற்றுக் கொண்டுள்ளோம். நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி வேறு காலங்களை விட வித்தியாசமானது.

அந்த வகையில் இதற்கு முதல் சர்வதேச நாணய நிதியத்திடம் சென்றதற்கும் இம்முறை சென்றதற்குமிடையில் வித்தியாசம் காணப்படுகிறது. இப்போது நாம் அந்த நிதியத்திடம் சென்றது தவறு என்றால் அப்போது சென்றதும் தவறுதான். நாம் சர்வதேச நாணய நிதியத்திடம் 16 தடவைகள் சென்றுள்ளோம்.

இம்முறை நாம் கண்டிப்பாக செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. ஏனெனில் வேறு எந்த நாடுகளும் எமக்கு கடன் தராத நிலைமையே காணப்பட்டது. கொடுத்த கடன்கள் அத்தனையையும் அந்த நாடுகள் நிறுத்தின. 2022ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நாடு வங்குரோத்து அடைந்தது.

அப்போது அதற்கு ஆதரவாக பேசிய, அமைச்சரவையில் இருந்தவர்களே இப்போது பல்வேறு எதிர் கருத்துக்களை முன் வைக்கின்றனர். நாம் அப்போது அமைச்சரவையில் இருக்கவில்லை. சர்வதேச நாணய நிதியத்திற்கு செல்கின்றமை தொடர்பில் தர்க்கங்கள் காணப்படுகின்றன. அது வேறு விடயம்.

சர்வதேச நாணய நிதிய அங்கத்தவர்கள்

சர்வதேச நாணய நிதியத்தின் முக்கிய நிபந்தனையொன்றை வெளிப்படுத்திய அமைச்சர் | Conditions Of International Funding To Sri Lanka

எமக்கும் சில மாற்றுக் கருத்துக்கள் உள்ளன. எனினும் நான் வங்கியொன்றின் வாடிக்கையாளர் என்றால் எனக்கு நிதி நெருக்கடி இருக்குமானால் நான் அந்த வங்கியிடம் சென்று தான் கடன் கேட்க வேண்டும். அவ்வாறு வங்கி கடன் தரும் போது நான் விரும்பிய விதத்தில் அந்த கடனை வங்கி ஒருபோதும் கொடுக்காது.

மாறாக அதனை என்னால் மீள செலுத்த முடியுமா என்பதை கட்டாயம் பார்க்கும். நான் எவ்வாறு கடன் பட்டேன் என்பதையும் சாதாரண பொருளாதார நிலையில் எவ்வாறு அதனை தீர்த்துக் கொள்ள முடியும் என்றும் பார்க்கும். அந்த வகையில் சர்வதேச நாணய நிதியத்தில் நாம் அங்கத்தவர்கள்.

இதற்கு முன்னரும் அங்கு சென்றுள்ளோம். நாட்டுக்கு கிடைத்த அனைத்து கடன்களும் நிறுத்தப்பட்ட நிலையில் அந்நிய செலாவணி வருமானம் மிகவும் வீழ்ச்சியடைந்த நிலையில் மத்திய வங்கி மற்றும் வங்கிகள் வெளி வர்த்தக நிறுவனங்களிடம் அதிக வட்டிக்கு கடன் பெறும் நிலையே காணப்பட்டது.

சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கை தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் நிலவலாம். எனினும் எந்த வங்கிகளிலும் எந்த நாட்டிலும் கைமாற்று முறையிலாவது கடன் பெற முடியாத ஒரு நிலையிலேயே சர்வதேச நாணய நிதியம் எமக்கு கை கொடுத்தது.

அவ்வாறு அந்த நிதியம் வழங்கும் 2.9 பில்லியன் டொலர் நிதி கிடைத்துள்ள நிலையில் இப்போது எமக்கு கடன் பற்றுப் பத்திரத்தை பெற்றுக் கொள்ள முடியும். சர்வதேச நாணய நிதியத்தின் ஒரு நிபந்தனை தான் ஊழல் மோசடிகளை நிறுத்துவது. அந்த சட்டம் மூலம் தற்போது நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.


Parliament Live


நன்றி நவிலல்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, Toronto, Canada

29 Feb, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 6ம் வட்டாரம், நீராவியடி, Toronto, Canada

22 Feb, 2024
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, கந்தர்மடம், யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, வெள்ளவத்தை

27 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

20 Feb, 2016
நன்றி நவிலல்

கொக்குவில், London, United Kingdom

27 Jan, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை வடக்கு, கனகாம்பிகைக்குளம், Ross-on-Wye, United Kingdom

01 Mar, 2024
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, புங்குடுதீவு இறுப்பிட்டி, வேலணை மேற்கு, Markham, Canada

27 Feb, 2026
மரண அறிவித்தல்

மயிலிட்டி, கொழும்பு, Zürich, Switzerland

23 Feb, 2026
நன்றி நவிலல்

அளவெட்டி, கொக்குவில் மேற்கு, Montreal, Canada

25 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US