நிபந்தனையின் கீழ் விடுதலைசெய்யப்பட்ட இந்திய கடற்றொழிலாளர்கள்
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் கடற்றொழிலாளர்கள் 8 பேரை நிபந்தனையின் அடிப்படையில் விடுதலை செய்ய மன்னார் நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த மாதம் 6 ஆம் திகதியன்று இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட ராமேஸ்வரம் கடற்றொழிலாளர்கள் 8 பேரை இலங்கை கடற்படையினர் தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து கைது செய்தனர்.
தூதரக அதிகாரியிடம் ஒப்படைப்பு
கைதான 8 கடற்றொழிலாளர்களும் மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட்டதன் பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.
இந்நிலையில், இந்த கடற்றொழிலாளர்கள் நேற்று (20) மீண்டும் மன்னார் நீதிமன்றத்தில் முன்னிலை படுத்தப்பட்டனர். இதன் போது விசாரணைகளை மேற்கொண்ட நீதவான் ' நிபந்தனையின் கீழ் அவர்களை விடுதலை செய்தார்.
இதனைத் தொடர்ந்து விடுவிக்கப்பட்ட கடற்றொழிலாளர்கள் இந்தியத் துணைத் தூதரக அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.




