திடீரென முடிவை மாற்றிய IMF - இலங்கைக்கு மீண்டும் நிபந்தனை விதிப்பு
இலங்கைக்கு கடன் வழங்குவதற்காக முன்வந்த நிபந்தனைகளை சர்வதேச நாணய நிதியம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
சீனாவின் கடன் உறுதிப்பத்திரம் இன்றி இலங்கைக்கான கடனை விடுவிக்க முடியாது என சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய பசுபிக் பிராந்தியத்தின் தலைவர் கிருஷ்ணா சீனிவாசன் தெரிவித்தார்.
சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடன் பெறுவதற்கான நிதிக் குழுவின் ஒப்புதலைப் பெற இலங்கைக்கு சிறந்த வழி சீனா உட்பட இருதரப்பு கடன் வழங்குநர்களிடமிருந்து நிதி உத்தர வாதங்களைப் பெறுவதாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சீனாவின் நிதி உத்தரவாதம் இல்லாவிட்டாலும், சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு கடன் தொகையை வழங்க பரிசீலித்து வருவதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகி இருந்தன.
எனினும் இந்தத் தகவல்களை மறுத்த சீனிவாசன், சீனாவின் உத்தரவாதத்தை இலங்கை பெறுவது மிகவும் முக்கியமானது எனவும் தெரிவித்துள்ளார்.
கடன் தொகையை வழங்கத் தேவையான நிதிச் சான்றிதழ்களை கடனாளிகளிடம் இருந்து இலங்கை விரைவில் பெற்றுக்கொள்ள முடியும் என நம்புவதாகவும் நிதியத்தின் ஆசிய பசுபிக் பிராந்தியத்தின் தலைவர் கிருஷ்ணா சீனிவாசன் மேலும் தெரிவித்தார்.

இந்த தேதியில் பிறந்தவங்க 30 வயசுக்குள்ள கோடீஸ்வரர் ஆவார்களாம்.. உங்களுக்கும் யோகம் இருக்கா? Manithan

WHO அமைப்பின் நடுங்கவைக்கும் திட்டம்... சீனா, ரஷ்யாவால் மதிப்பிழக்கும் டொலர்: வாழும் நாஸ்ட்ராடாமஸ் கணிப்பு News Lankasri
