18 இந்திய கடற்றொழிலாளர்களுக்கு நிபந்தனையின் அடிப்படையில் விடுதலை

Indian fishermen Mannar Law and Order
By Ashik Feb 01, 2024 01:01 AM GMT
Report

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து கைது செய்யப்பட்டு பின் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 18 இந்திய கடற்றொழிலாளர்கள் நிபந்தனையின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் நேற்றையதினம் (31.01.2024) மன்னார் நீதி மன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

பணிப்பாளரின் அனுமதியின்றி இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்டமை, இலங்கை கடற்பரப்பில் கடற் தொழிலில் ஈடுபட்டமை, மற்றும் இலங்கையில் தடை செய்யப்பட்ட இழுவை மடி தொழில் முன்னெடுத்தமை ஆகிய மூன்று குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டது.

18 இந்திய கடற்றொழிலாளர்களுக்கு நிபந்தனையின் அடிப்படையில் விடுதலை | Conditional Release For 18 Indian Fishermen

குறித்த குற்றச்சாட்டுக்களை விசாரணைக்கு உட்படுத்திய நீதவான் 1 ஆம் மற்றும் 2 ஆம் குற்றச்சாட்டுகளுக்கு 12 மாதங்களும், 3 ஆவது குற்றச்சாட்டுக்கு 6 மாதங்களுக்கு விதிக்கப்பட்டு 5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறை தண்டனை வழங்கப்பட்டு இவர்களை நிபந்தனையின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டனர்.

இந்தியாவுக்கு அனுப்ப நடவடிக்கை

மேலும் படகிற்கு குறித்த வழக்கு விசாரணை எதிர்வரும் மார்ச் மாதம் 20 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. இதன் போது அன்றைய தினம் படகின் உரிமையாளர் மன்றில் முன்னிலையாகுமாறு மன்று கட்டளை பிறப்பித்துள்ளது.

18 இந்திய கடற்றொழிலாளர்களுக்கு நிபந்தனையின் அடிப்படையில் விடுதலை | Conditional Release For 18 Indian Fishermen

விடுதலை செய்யப்பட்ட 18 இந்திய கடற்றொழிலாளர்களும் இந்திய துணைத் தூதரக அதிகாரிகள் ஊடக மிரிஹான நிலையத்துக்கு அனுப்பப்பட்டு நாட்டுக்கு அனுப்ப நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்டம் தாழ்வுபாடு கடல் பகுதியை அண்மித்த கடற்பரப்புக்குள் சட்டவிரோதமாக உள்நுழைந்து இரண்டு ரோலர் படகுகளில் மீன்பிடியில் ஈடுபட்ட தமிழக கடற்றொழிலாளர்கள் 18 பேர் கடந்த (16.01.2024) ஆம் திகதி கடற்படையினரால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US