சுதந்திர தின கொண்டாட்டங்கள் - ஜனாதிபதி ரணில் விதித்துள்ள நிபந்தனை (video)
75வது சுதந்திர தின கொண்டாட்டத்தின் போது நாட்டின் தற்போதைய நிதி நிலைமை குறித்து கவனம் செலுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அனைத்து தரப்பினருக்கும் ஆலோசனை வழங்கியுள்ளார்.
அரசியல் அதிகாரம் மற்றும் ஏனைய அதிகாரிகள் அதற்கேற்ப செலவுகளை குறைக்க வேண்டும் என ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
குறைந்த செலவில் சுதந்திர தினத்தை பிரமாண்டமாகவும் கௌரவமாகவும் முன்னெடுப்பது தொடர்பாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த விடயங்களை குறிப்பிட்டுள்ளார்.
75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பல வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
சிறப்பு தலதா பூஜை மற்றும் பிரித் உபதேசம், சர்வமத நிகழ்வுகள், சுதந்திர சதுக்கத்தில் கலாசார நிகழ்ச்சி, காலி முகத்திடலில் நடைபெறும் பாரம்பரிய சுதந்திரக் கொண்டாட்டங்களின் முக்கிய நிகழ்வுகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.