தமிழ் பொதுவேட்பாளரை எதிர்ப்போருக்கு கண்டனம் வெளியிட்ட கடற்றொழிலாளர் சங்க பிரதிநிதி
யுத்தம் முடிவடைந்து 15 வருடங்கள் கடந்த பின்னும் மக்களுக்கு எதுவும் செய்யாமல் இன்றைக்கு தமிழ் வேட்பாளர் என்று ஒருவரை மக்கள் நிறுத்தும் போது நீங்கள் விமர்சனம் செய்கிறீர்கள். அவ்வாறு இனிவரும் காலங்களில் விமர்சனம் செய்தால் அவர்கள் அனைவரதும் பெயரை கூற வேண்டி வரும் என வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசத்தின் உப தலைவர் நா.வரணகுலசிங்கம் தெரிவித்துள்ளார்.
யாழ். வடமராட்சி ஊடக இல்லத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் பொது வேட்பாளர் கட்சிகளை பற்றியோ இல்லையென்றால் நபர்களைப் பற்றியோ எதுவித விமர்சனமும் செய்யவில்லை.
இது ஜனாதிபதித்தேர்தல். தமிழ் மக்கள் அனைவரும் ஒன்றாக இணைய வேண்டும் என்பதற்காக இவ்வாறானதொரு முடிவெடுக்கப்பட்டது.
ஆகவே நாங்கள் அனைவரிடமும் கூறிக்கொள்வது தமிழ் பொது வேட்பாளரை நீங்கள் யாரும் விமர்சிக்கக்கூடாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,