வெளிநாட்டிலிருந்து இருந்து இலங்கை வந்த நபர் வீட்டில் உயிரிழப்பு
கொழும்பின் புறநகர் பகுதியிலுள்ள வீடொன்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மத்தேகொட, கல்வலதெனிய பிரதேசத்தில் தனியாக வசித்து வந்த 65 வயதான சமன் ரொஹான் என்பவரின் சடலமே மீட்கப்பட்டுள்ளது.
குறித்த நபர் சுமார் 26 வருடங்களுக்கு முன்னர் திருமணம் செய்து தனது மனைவியுடன் அவுஸ்திரேலியாவிற்கு சென்றுள்ளார். அவர் மீண்டும் இலங்கைக்கு வந்து வீட்டில் தனியாக வாழ்ந்து வந்துள்ளார்.
வெளிநாட்டு பணம்
இதனிடையே இவரின் மாதாந்த செலவுக்காக மனைவி வெளிநாட்டிலிருந்து பணம் அனுப்பி வந்துள்ளார். பணத்தை பெற்றுக் கொண்ட பின்னர் பணம் கிடைத்ததாக தெரியப்படுத்தும் கணவர் இம்முறை தொலைபேசியில் அழைப்பேசியில் அழைப்பேற்படுத்தவில்லை.
இதனால் அயல்வீட்டு நபருக்கு அழைப்பேற்படுத்தி கணவர் தொடர்பில் ஆராய்ந்து பார்க்குமாறு மனைவி கேட்டுக்கொண்டுள்ளார்.
பொலிஸார் நடவடிக்கை
எனினும் கடந்த சில நாட்களாக வீட்டில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு காணப்படுவதாக குறிப்பிட்டுள்ளர்.
இதனையடுத்து பொலிஸார் மேற்கொண்ட நடவடிக்கைக்கு அமைய குறித்த நபர் உயிரிழந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சீனா, பாகிஸ்தானுக்கு கவலை அதிகரிப்பு., இந்திய விமானப்படைக்கு 3 ISTAR விமானங்கள் வாங்க ஒப்புதல் News Lankasri

சீனாவால் இந்தியாவில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தியில் கடும் தாக்கம் - Bajaj, Ather, TVS பாதிப்பு News Lankasri

125,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த கற்கால மனிதர்கள் இயக்கிய தொழிற்சாலை ஜேர்மனியில் கண்டுபிடிப்பு News Lankasri
