தையிட்டி விகாரை தொடர்பில் எழுந்துள்ள கண்டனம்
தமிழர்களுடைய நிலங்களை அபகரித்து நிற்கும் தையிட்டி விகாரை தொடர்பில் சமாதானத்திற்கும் நல்லிணக்கத்திற்குமான பணியகம் தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இந்து, கிறிஸ்தவ, இஸ்லாமிய மதத்தை பின்பற்றக்கூடியவர்கள் அதிகமாக வாழுகின்ற வடக்கு கிழக்கு மாகாணங்களில் யுத்தத்திற்கு பின்பு பல இந்து கிறிஸ்தவ ஆலயங்களின் புனரமைப்பு, மீள் கட்டுமானப்பணிகள் மற்றும் அரச படைகளின் கட்டுப்பாட்டிற்கு கீழுள்ள ஆலய காணிகளை விடுவித்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டிய நிலை உள்ளது.
கண்டனம்
இந்நிலையில், பௌத்த மதத்தை பின்பற்றுகின்றவர்கள் இல்லாத இடங்களில் அரச அதிகாரப் படையினரின் அனுசரணையோடு அத்துமீறிய இன, மத முரண்பாடுகளை தோற்றுவிக்கும் வகையில் பல செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதை அவதானிக்க முடிகிறது.
அந்த வகையில், தையிட்டியில் மக்களுக்குரிய காணியில் சட்ட விரோத முறையில் அமைக்கப்பட்டு வரும் திஸ்ஸ விகாரை தொடர்பாக வடக்கு மாகாணத்தின் சமாதானத்திற்கும் நல்லிணக்கத்திற்குமான பணியகம் கண்டனத்தை தெரிவித்து நிற்கின்றது.

கொழும்பு நீதிமன்றத்திற்குள் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவம்: வவுனியா மேல் நீதிமன்றம் முன்பாக பதாகை
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

உக்ரைன் ஜனாதிபதி மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு மோசமாக விமர்சித்துள்ள எலான் மஸ்க் News Lankasri

விஜய் டிவியை தொடர்ந்து வேறொரு தொலைக்காட்சியின் சீரியலில் கமிட்டாகியுள்ள நடிகை ஷோபனா.. முழு விவரம் Cineulagam
