பெறுமதிசேர் வரி தொடர்பான உயர்நீதிமன்ற வியாக்கியானம் சபாநாயகருக்கு!
அண்மையில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட உத்தேச பெறுமதிசேர் வரி (திருத்தம்) யோசனைக்கு ஆதரவாகவும் எதிராகவும் முன்வைக்கப்பட்ட வாதங்களை உயர் நீதிமன்றம் நேற்று நிறைவு செய்தது.
இதன்படி, மனுக்கள் தொடர்பான அனைத்து தரப்பினரும் இந்த விசேட தீர்மான மனுக்கள் தொடர்பாக எழுத்துமூலமான சமர்ப்பிப்புகளை சமர்ப்பிக்குமாறு உத்தரவிடப்பட்டது.
இந்தநிலையில் உத்தேச சட்டமூலம் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் வியாக்கியானம், சபாநாயகருக்கு இரகசியமாக அறிவிக்கப்படவுள்ளது.
பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, நீதியரசர் எஸ். துரைராஜா மற்றும் நீதியரசர் அர்ஜுன ஒபேசேகர ஆகியோர் அடங்கிய மூன்று நீதியர்கள் அடங்கிய அமர்வு இந்த வாதங்களை பரிசீலித்தது.
மக்கள் வாக்கெடுப்பில் ஒப்புதல் பெற வேண்டும்
வர்த்தகரான எம். விக்டர் என்பவர் உட்பட்ட இரண்டு மனுதாரர்கள் சட்டமா அதிபரை பிரதிவாதியாக பெயரிட்டு இந்த மனுக்களை தாக்கல் செய்தனர்.
இந்த யோசனை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ மக்கள் வாக்கெடுப்பில் ஒப்புதல் பெற வேண்டும் என்றும், நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை தேவை என்றும் மனுதாரர்கள் கோருகின்றனர்.
இந்த யோசனையின் விதிகள் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ, நாடாளுமன்ற தகுதிக்கு
அப்பாற்பட்டது, பொது நோக்கத்திற்காக அல்ல என்றும், அரசியலமைப்பின் கீழ்
உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளை மீறுவதாகவும் மனுதாரர்கள்
குறிப்பிட்டிருந்தனர்.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 2 நாட்கள் முன்

குணசேகரன் குறித்து சாமியார் கூறிய உண்மை, அடிக்கச்சென்ற கதிர்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

புலம்பெயர்ந்தோர் விவகாரம்... சில நாடுகளின் விசா அனுமதியை ரத்து செய்யவிருக்கும் பிரித்தானியா News Lankasri

அய்யனார் துணை சீரியல் நடிகர் சோழனுக்கு நிஜ வாழ்க்கையில் இப்படியொரு சோகமா?... கண்ணீரில் அரங்கம், வீடியோ Cineulagam

குப்பையில் இருந்து சாப்பிட்டு.., அம்பானி திருமணத்தில் வேலை செய்து ரூ.50 சம்பாதித்த நடிகை யார்? News Lankasri
